அரசாணை - 540 ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: மு.திலீபன், தே.தீட்ஷித்

*எவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பையும் அகற்றமுடியும்

*60 நாட்களுக்குள் பணிகளை முடிக்கவேண்டும்

*அரசு அலுவலகங்களில் விளம்பரம் செய்யவேண்டும்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பதாகை அனைவரையும் கவர்கிறது. ‘நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட அனைத்துவிதமான ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்’ என எளிமையாக வழிகாட்டுகிறது, தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அரசாணை-540. ஒரு சாதாரண சாமானியன் கூட, பெரிய ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது, இதில் உள்ள வாசகங்கள்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தாரேஸ் அகமது மற்றும் துணை ஆட்சியராக இருந்த மதுசூதன ரெட்டி ஆகியோரின் முயற்சியில் இந்த விழிப்பு உணர்வு பதாகை வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் அரசு அலுவலகங்களிலும் அரசாணை-540ஐ விழிப்பு உணர்வு பதாகை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து... அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது, தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் ‘சுவாமிமலை’ சுந்தர விமலநாதன், “திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் முகமது மாலிக், ஈரோடு மாவட்ட விவசாயி மாரப்ப கவுண்டர் ஆகியோர் தனித்தனியாக... தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதுதான், ‘தமிழ்நாடு அரசு என்னதான் செய்கிறது’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தமிழ்நாடு அரசு, 4.12.2014 அன்று ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பான பிரத்யேக அரசாணை வெளியிட்டது. அதுதான் அரசாணை-540.

தமிழ்நாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் எத்தகைய ஆக்கிரமிப்புகளாக இருந்தாலும் அகற்ற வேண்டும் என இந்த அரசாணை வலியுறுத்துகிறது. இந்த அரசாணையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007’ நடைமுறையில் உள்ளது. ஆனால் அது வெறும் சட்டமாக மட்டுமே  உள்ளது. ஆனால், அரசாணை-540, அதிகாரிகளை இயங்க வைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் உரிய வழிவகை செய்கிறது” என்ற சுந்தர விமல்நாதன் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்