விதைகள் இங்கே கிடைக்கும்..!

பசுமைக்குழு, படங்கள்: வீ.சிவக்குமார்

ரியான மழை, சரியான தட்பவெப்பம், நல்ல மண்வளம் எல்லாம் இருந்தாலும்... 

விதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன் தருமா என்பது பல மாதங்கள் கழித்துத்தான் தெரிய வரும். ஆனால், சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்கும்போது பெரும்பாலும் இப்பிரச்னைகள் வருவதில்லை. அப்படி சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை, நியாயமான விலையில் விற்றுவருகிறது, மத்திய வேளாண் துறையின்கீழ் இயங்கிவரும் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation). இங்கு விதைகள் ஆடிப்பட்டத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.

தேசிய விதைக் கழகம், 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெல், உளுந்து, பச்சைப் பயறு, துவரை, நிலக்கடலை, காய்கறிகள், கீரைகள், கம்பு, சோளம், கேழ்வரகு... என அனைத்து வகையான விதைகளும் விதைக் கழகத்தின் மூலம் விற்பனை செயயப்படுகிறது. இக்கழகத்தின் மண்டல அலுவலகம் சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஊட்டி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இடங்களில் பகுதி அளவிலான மையங்கள் செயல்படுகின்றன. உள்ளூர் தேவைக்குப் போக... மீதி விதைகள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அதேபோல வெளி மாநிலங்களிலிருந்தும் விதைகள் வரவழைக்கப்படுகின்றன. கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற விதைகளையும் விற்பனை செய்து வருகிறது, இக்கழகம்.வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து வெளியிடப்படும் உயர் விளைச்சல் ரகங்கள் மட்டுமே இங்கு கிடைக்கும்.

தேசிய விதைக் கழகம் சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்கிறது. விதைப் பையிலேயே முளைப்புத்திறன், ஈரப்பதம், காலாவதியாகும் தேதி போன்ற  விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை, ஆய்வு செய்த தேதியிலிருந்து
9 மாதங்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். வெளிச்சந்தையைவிட தேசிய விதைக் கழகத்தில் விதையின் விலை மிக மிகக் குறைவாக இருக்கும். வெளிமாநில விதைகளை அதிகளவில் கேட்பவர்களுக்கு விதைக்கழகமே தருவித்துக் கொடுக்கிறது. குறைந்த அளவு விதைகள் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு தபால் மூலம் வாங்குவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பார்கள், விதைக்கழக அலுவலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்