காட்டுயானம்... சேலம் சன்னா... பூங்கார்... கருத்தகார்...

பலே லாபம் கொடுக்கும் பாரம்பர்ய ரகங்கள்!4 ஏக்கர்... 6 மாதங்கள்... 1,93,000 ரூபாய் லாபம்! இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

*எல்லா மண் வகைக்கும் ஏற்றவை

*ஆடிப்பட்டம் ஏற்றது

*ஏக்கருக்கு 4 கிலோ விதை

*அரிசியாக விற்றால், கூடுதல் லாபம்

யற்கை விவசாயத்துக்கு மாறும் பெரும்பாலான விவசாயிகள்...  வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, நோய் எதிர்ப்புச் சக்தியுடைய, சத்தான பாரம்பர்ய ரகங்களைத்தான் தேடி நடவுசெய்து வருகிறார்கள். அதனால்தான் பாரம்பர்ய ரகப் பயிர்கள் பலவும் காப்பாற்றப்பட்டு வருகின்றன. தவிர, சமீபகாலத்தில் பாரம்பர்ய ரகங்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்... அவற்றின் தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சந்தை வாய்ப்பு பெருகி வருவதால், பாரம்பர்ய ரகங்களின் சாகுபடிப் பரப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சமுத்திரபாண்டி மகேஷ்வரன், பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், பணகுடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பதிவிரிசூரியன் கிராமத்தில் உள்ளது, சமுத்திரபாண்டி மகேஷ்வரனின் தோட்டம்.

காட்டுயானம், கருத்தகார், பூங்கார், சேலம் சன்னா ஆகிய நான்கு வகை பாரம்பர்ய நெல் ரகங்களை விதைக்க நாற்றங்கால் தயார் செய்துகொண்டிருந்த சமுத்திரபாண்டி மகேஷ்வரனைச்  சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்