பஞ்சகவ்யா - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்பலே பஞ்சகவ்யா... மண்வளம் கூடுது... மகசூல் கூடுது..!விவசாயப் பட்டதாரியின் வாக்குமூலம்...!ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து தகவல்களைத்  தொடர்ந்து பார்த்து வருகிறோம். தன் வாழ்வில் பஞ்சகவ்யா ஏற்படுத்திய மாற்றங்களை இங்கே விவரிக்கிறார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓ.கே.ஆர். ராதாகிருஷ்ணன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதுதான் இங்கே கவனிக்கதக்க விஷயம்.

‘‘எனக்கு சொந்த ஊரே இந்த வேலாயுதம்பாளையம்தான். எம்.எஸ்சி. அக்ரி படிச்சு முடிச்ச கையோட புகளூர் பேப்பர் மில்லுல வேலையில சேர்ந்தேன். பலவருஷம் அங்க வேலை பார்த்துட்டு, ஒரு கட்டத்துல வெளியில் வந்து சொந்தமா வியாபாரம் செஞ்சுக்கிட்டு... கூடவே எனக்கு சொந்தமான 30 ஏக்கர் நெலத்துல விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

ஒரு காலத்துல, லிட்டர் கணக்குல பூச்சிக்கொல்லி விஷத்தையும், மூட்டை மூட்டையா ரசாயன உரத்தையும் நெலத்துல கொட்டினேன். நான் படிச்ச படிப்பு அதைத்தான் எனக்கு கத்துக்கொடுத்தது. இப்படி செய்றது சரியா தப்பானு கூட யோசிக்கல. ஆனா, 2000-ம் வருஷம் டிசம்பர் மாசம், குளித்தலை பக்கத்துல இருக்கிற லாலாபேட்டையில் விவசாயக் கருத்தரங்கு ஒண்ணு நடக்குது. அதுல கலந்துக்கப் போறோம். நீங்களும் வாங்க’’ அப்படினு என்னுடைய நண்பர்கள் வற்புறுத்தி கூட்டிட்டுப் போனாங்க. ‘நாம எம்.எஸ்சி அக்ரி படிச்ச பட்டதாரி நமக்கு தெரியாத விஷயத்தையா இந்தக் கருத்தரங்கில சொல்லிடப்போறாங்க’னு ஒரு மெதப்பிலதான் போய் உட்கார்ந்தேன். சிறப்புப் பேச்சாளரா நம்மாழ்வார் அய்யா பேசத் தொடங்கினார். நான் எந்த ஈடுபாடும் காட்டாம ஒப்புக்கு சப்பையா உட்கார்ந்திருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்