இயற்கையின் குடியிருப்பு... விளாங்கொம்பை..!

பா.நரேஷ்

ங்கள் அலாரம் வாழ்க்கையை அணைத்துவிட்டு, சற்று செவிசாயுங்கள். இயற்கையின் மடியில் துள்ளி விளையாடும் விளாங்கொம்பைக்கு ஓர் உலா போய் வாருங்கள். மழைச் சாரலுடன் மலைச் சரிவில் ஒரு கிராமம். ஓசையற்ற ஓர் உலகம். ஏதாவது சத்தம் வந்தாலும், அது சங்கீதம். மூளையால் வாழும் நகர வாழ்க்கையிலிருந்து இதயத்தால் வாழும் இயற்கை வாழ்வியலை நோக்கிய பயணம். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வினோபா நகர் வழியாக விளாங்கொம்பைக்குச் செல்லலாம். வினோபா நகரில் இருந்து எட்டிப்பார்த்தால் பசுமை போர்த்திய இரண்டு மலைகள். சரியாக அந்த மலைகளுக்குப் பின்னால் ஒரு மச்சம் போல இருக்கிறது விளாங்கொம்பை. அங்கு செல்ல வேண்டுமென்றால், மலை மீது நடந்துதான் செல்ல வேண்டும். மலைக்கு மடி வலிக்கவில்லை, மிதித்துச் சென்ற நமக்கு கால்கள் வலித்தன.

வழியெங்கும் கிடக்கின்றன யானைகளின் எச்சங்கள். அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் செல்ல இயலாது. ஆங்காங்கே மரங்களில் மாட்டப்பட்டிருக்கும் கேமராக்கள் மிருகங்களையும், அத்துமீறி நுழையும் மனிதர்களையும் கண்காணிக்கின்றன.

அரசியல்வாதியும் ஆங்க்ரி பேர்ட்சும்!

அவ்வளவு நேரம் அழகாய் தண்ணீர் பருகிக்கொண்டிருந்த மான், நாம் வருவதைக் கண்டதும் தேர்தலில் ஜெயித்த அரசியல்வாதியைப்போல துள்ளிக்குதித்து ஓடி மறைந்துவிட்டது. வழியெங்கும் நம்மை இசையுடன் வரவேற்றன பெயர் தெரியாத பறவையினங்கள். நகரத்தில் ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ விளையாடும் குழந்தைகளுக்கு, இந்த பறவைகளின் இன்னிசைகளைக் கேட்க கொடுத்து வைக்கவில்லை. இறுதியில், அந்த கிராமத்தை அடைந்தோம். எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், பெற முடியாத பல அனுபவங்களையும் பாடங்களையும் பயிற்றுவித்தது அந்த கிராமம்.  விரல் விட்டு எண்ணும் அளவே வீடுகள் இருந்தன. தோராயமாக 40 குடும்பங்கள்தான்,

மக்கள் தொகை 150 பேர் மட்டுமே!.

இயற்கை வளங்களைச் சுரண்டாமல் இயற்கையின் மிச்சத்தையே பயன்படுத்தும் அவர்களது வாழ்க்கை முறை அலாதியானது. ஒரே ஓர் அறை மட்டும் உள்ள அவர்களது வீடுகளில் நிரம்பி வழிகிறது மகிழ்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்