குறைந்த செலவில் நீங்களே அமைக்கலாம், வெங்காய சேமிப்புக் கலன்...

கு.ஆனந்தராஜ்

வெங்காயம் அளவில் சிறியதாக இருந்தாலும், சில நேரங்களில் ஆட்சியையே ஆட்டம் காணச் செய்து விடும். ஆட்சியாளர்களையே அந்தப் பாடுபடுத்தும் வெங்காயம் விவசாயிகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன? சில நேரங்களில் வருமானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பல நேரங்களில் விலை இல்லாமல் விவசாயிகளை கண்ணீர் விட வைத்து விடுகிறது. அறுவடை முடிந்ததும் கிடைத்த விலைக்கு விற்பனை செய்யாமல், சேமித்து வைத்து, விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், சேமித்து வைக்கும் வசதி இல்லாமல் பல விவசாயிகள் அந்த எண்ணத்தையே கைவிட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் குறைந்தசெலவில் வெங்காய சேமிப்புக் கலன் அமைக்க வழிகாட்டுகிறார், ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையான அனுராதா.

‘‘நான் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்துறையில இணைப் பேராசிரியையா இருக்கேன்.

ஒரு புராஜக்ட்டுக்காக “கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்ட வசதியுள்ள வெங்காய சேமிப்புக் கலன்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையை டெல்லியில் இருக்கிற பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு, அனுப்பி இருந்தேன். போன வருஷம் என்னோட கட்டுரையைத் தேர்வு செஞ்சாங்க. உடனே, அது தொடர்பான தகவல்களைச் சேகரிச்சேன். புனேயில் இருக்கிற, வெங்காய ஆராய்ச்சி மையத்துக்குப் போய் பல செயல்முறைகளைத் தெரிஞ்சுகிட்டு வந்தேன். முதல்கட்டமா எங்க கல்லூரியிலேயே ஒரு ‘மாதிரித் திட்டம்’ செய்யலாம்னு முடிவு பண்ணினேன். வீட்டுத் தேவைக்கு 50 கிலோ வெங்காயத்தை சேமிக்கிற மாதிரி, ‘வீட்டு சேமிப்புக் கலனையும், ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரையிலான வெங்காயத்தைச் சேமிக்கிற மாதிரி விவசாயிகளுக்கான சேமிப்புக் கலன்னு ரெண்டு விதமா அமைச்சேன்.” என்ற அனுராதா வெங்காய சேமிப்புக் கலன்களின் அமைப்பை பற்றி விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்