முயல், கோழி, ஆடு வளர்ப்பு... கால்நடைப் பண்ணையாளர்களுக்குக் கைகொடுக்கும் கருவிகள்...

துரை.நாகராஜன், படங்கள்: ப.சரவணக்குமார்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதுபோல... கால்நடை வளர்ப்பாளர்களுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிப்பண்ணை, அவ்வப்போது பண்ணைக்கருவிகளை வெளியிட்டு வருகிறது. அதுகுறித்து கடந்த இதழில், வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இங்கே இடம்பிடிக்கிறது.

பன்முகப் பயன்பாட்டு இருசக்கரப் பண்ணை வண்டி!

தற்போது புழக்கத்தில் உள்ள நவீன பண்ணைக்கருவிகள் குறித்து பேசிய பேராசிரியர் டென்சிங் ஞானராஜ், ‘‘ பண்ணைகளில் தினசரி வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கால்நடைக் கழிவுகள் போன்றவற்றைச் சேகரித்துக் குப்பைக் கிடங்கில் கொட்டுவது, கால்நடைத் தீவனங்களைச் சேமிப்புக் கிடங்கிலிருந்து கொட்டகைக்குக் கொண்டு வருவது, பசுந்தீவனங்களைக் கொண்டு செல்வது, பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வது போன்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் வகையில், இருசக்கரப் பண்ணை வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்தே முக்கால் அடி நீளம், இரண்டே முக்கால் அடி அகலம் மற்றும் ஓர் அடி உயரம் என்ற அளவில் அமைக்கப்பட்ட இந்த வண்டி, 125 லிட்டர் அல்லது 125 கிலோ எடை கொண்ட பொருட்களைக் கொண்டு செல்ல ஏற்றது. வண்டியில் பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதும் மிக எளிது. மேலே அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உருளையை எளிதாகத் தூக்கி, கொண்டுவந்த சுமையை கீழே கொட்டலாம். மிக உறுதியாகவும், எளிதில் இயக்கக்கூடியதான வடிவமைப்பையும், சுலபமாக சுழலக்கூடிய சக்கரங்களையும் கொண்டது. இதன் சந்தை விலை 9 ஆயிரத்து 600 ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்