தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆய்வுக்கூட்டம்!

பசுமைக்குழு

தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆய்வுக்கூட்டம், அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 10 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

கூட்டத்தில், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விரிவான ஆய்வு நடைபெற்றது.  தவிர, வாரியத்தின் திட்டங்கள், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் எதிர்கால திட்ட வழிமுறைகள் ஆகியவை விரிவாகப் பேசப்பட்டன.

மகசூல், விவசாயிகளின் எண்ணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட பங்கு மற்றும் செலுத்திய மூலதனம், தென்னை மதிப்புக்கூட்டுப் பொருட்கள், பாரம்பர்ய பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆகிய காரணிகளைக் கொண்டு, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆய்வு செய்ததில்... முதல் தரத்தில் பொள்ளாச்சி, கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களும், இரண்டாம் தரத்தில் உடுமலைபேட்டை நிறுவனமும், மூன்றாம் தரத்தில் மடத்துக்குளம் மற்றும் திண்டுக்கல் நிறுவனமும், நான்காம் தரத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூர், மற்றும் திருப்பூர் நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன. குறைவான தரத்தில் உள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்