நீர் மேலாண்மைத் திட்டங்களே... நிரந்தர தீர்வை தரும்..!

‘திட்டங்களை வகுக்குமா தமிழக அரசு?’ தூரன்நம்பி, படங்கள்: சு.குமரேசன், அ.முத்துக்குமார்

தேர்தல் முடிந்துவிட்டது. தெருச் சண்டை ஓய்ந்துவிட்டது. ‘தேசிய ஊழல்’ தோற்று, ‘தென்னக ஊழல்’ வென்று வாகை சூடியிருக்கிறது. ஊழல்களின் ஆழம், அகலம், பரிணாமம் பற்றி அத்தனை அணிகளும் புட்டு புட்டு வைத்ததால் மக்கள் ‘தெளிவு’ பெற்று, இறுதியில் மாநில ஊழலை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், ஊழலை அங்கீகரிக்காத நேர்மையான வாக்காளர்களின் ஆயுதம் நோட்டா.

மக்கள் நல கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி, 17 தொகுதிகளில் வெற்றியை இடம் மாற்றியிருக்கிறது நோட்டா. உண்மையில் இது, அம்மாவுக்குக் கிடைத்த வெற்றியல்ல ‘நோட்டா’ போட்ட பேட்டா. ஜனநாயகத்தைக் கொன்று, பணமழை பொழிய வைத்து, இரண்டு அணிகள் ஆடிய சூதாட்டத்தில் ஓர் அணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும், நோட்டாவுக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிகரித்துக் கொண்டே போனால், எதிர்காலத்திலாவது தகுதியான வேட்பாளர்களுக்கு கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கலாம். ஊழல், மக்களுக்குப் பழகிவிட்டதோ என்ற தோற்றத்தை இந்தத் தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. எது எப்படியோ, முதல்வர் சிம்மாசனத்தில் மீண்டும் அமரும் ‘அம்மா’வுக்கு வாழ்த்துக்கள்.

ஊழல் புரையோடிக் கிடக்கும் தேசத்தில், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது... ஆனால், விவசாயிகளையும் கிராம மக்களையும் விரட்டி அடிக்கும் குடிநீர்ப் பிரச்னையை நாம் நினைத்தால், குறிப்பாக அரசாங்கங்கள் நினைத்தால் தீர்க்க முடியும். குடிநீர்ப் பிரச்னையைத் தலையாய பிரச்னையாகக் கருதி புதிய அரசு செயல்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

வற்றாத ஜீவ நதிகளான, கிருஷ்ணா, துங்கபத்ரா, மகா நதி, கோதாவரி ஆறுகள் பாயும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் வறட்சியின் கோரப்பிடி இறுகியதால், மக்கள் கொத்துக் கொத்தாக கிராமங்களை காலி செய்துகொண்டு நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகள் தீவனம் இல்லாமல் செத்து மடிகின்றன. வனவிலங்குகள் குடிநீர் தேடி, சர்வ சாதாரணமாக ஊருக்குள் உலா வருகின்றன. இதெல்லாம் அழிவின் அறிகுறிகள் என்பதை நமது அரசும் புரிந்து கொள்ளவேண்டும். இது தமிழகத்துக்கு ஊதிய அபாய சங்கு. வற்றாத ஜீவ நதிகள் ஓடும் மாநிலங்களின் கதியே இப்படி என்றால், ஆண்டு முழுவதும் ஆறுகள் வறண்டு கிடக்கும் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்