நீர்த்தேவை குறையுது... மண்ணிலுள்ள சத்துக்கள் செடியில் சேருது...

இயற்கை வேளாண்மையில் வெர்மிகுலைட்! ஆர்.குமரேசன்

*இடுபொருட்களின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்க உதவி செய்கிறது.

*தண்ணீரைச் சேமித்து வைத்து பயிர்களுக்குக் கொடுப்பதால் நீர்த் தேவை குறைகிறது.

*மண்ணில், காற்றோட்டம் ஏற்படுத்தி, பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கிறது.

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானதுதான் இயற்கை விவசாயம். கால்நடைக் கழிவுகள் உரமாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகின்றன. மண்புழுக் கழிவு, மண்புழு உரமாகிறது. இப்படி, பல கழிவுகள் மிகச் சிறந்த உரமாகவும், பயிர்களுக்கான வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றன. அந்த வகையில், இயற்கையில் சில கனிமங்கள் சிதைவுறும்போது உருவாகும் வெர்மிகுலைட் என்ற கனிமம், இயற்கை வேளாண்மையில் சிறந்த ஊடகமாக செயல்பட்டு தண்ணீரைச் சேமித்து வைத்து பயிர்களுக்குக் கொடுக்க உதவியாக இருக்கிறது. உரங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை பயிர்கள் முழுமையாக எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் சந்தைப்படுத்தி வருகிறது,  தமிழ்நாடு கனிம நிறுவனம்.

மாடியில் தோட்டம் போட்டால், செடிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் வழிந்து மாடியெங்கும் பரவும், வெயிலில் இருந்து செடிகளைப் பாதுகாப்பது கடினமானது என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் ‘மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தும், அதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது வெர்மிகுலைட். இதை செடிகள் உள்ள பைகளில் இடும்போது, தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. எனவே, தொட்டியை விட்டோ, பையை விட்டோ தண்ணீர் வீணாக வெளியே வராது... அடுத்து தட்பவெப்ப நிலைகளினால் செடிகள் பாதிக்கப்படுவதில் இருந்து காக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்