நல்வழி... நம்புவோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

*கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

*இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.

*மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

*கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.

*சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவையெல்லாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளில் சில.

இவற்றில் பலவும் பலகாலமாக விவசாயிகள் வைத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். ஆனால், நிறைவேறுவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.

கடந்த தடவை ஆட்சியிலிருந்தபோது, ‘‘கரும்பு ஆலைகள், நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று சட்டசபையிலேயே அறிவித்தார் தொழில்துறை அமைச்சர். ஆனால், இன்று வரையிலும்கூட அந்த உத்தரவை எந்த ஆலையும் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் எதார்த்தம்.

சரி, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும். ‘நானும் விவசாயிதான்’ என்று தன்னுடைய வேட்பு மனுவில் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, மீண்டும் கைவரப்பெற்றிருக்கும் முதல்வர் பதவியைப் பயன்படுத்தி, விவசாயிகளின் கவலைகளைப் போக்கி, நல்வழி காட்டுவார் என நம்புவோம்!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்