தேவை இருக்கு... வரத்து இல்லை... உளுந்து விதைத்தால் உன்னத லாபம்..!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். கடந்த இதழில், வெளியான உளுந்து குறித்த தகவல்களின் தொடர்ச்சி இங்கே...

65 நாட்களில் அறுவடைக்கு வரும் ரகம்!

விழுப்புரம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விற்பனைக்குழுவின் செயலாளர் சங்கர் உளுந்து குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘உளுந்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பரவலாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, பாண்டிச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவு மானாவாரியில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர் மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது. அம்மாதங்களில் பனியின் ஈரப்பதத்திலேயே உளுந்து வளர்ந்து விடும். காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக உளுந்தை வயலில் தூவி விடுவார்கள். அது, நெல்வயலின் ஈரப்பதத்தைப் பிடித்துக்கொண்டு வளரும். இப்படி நெல் தரிசாக பயிரிடுவதற்கு ஏ.டீ.டி-3, ஏ.டீ.டி-4, ஏ.டீ.டி-5 ரகங்கள் ஏற்றவை. மானாவாரியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வம்பன் ரகங்களைப் பயிரிடலாம். இறவைக்கும், மானாவாரிக்கும் கே.எம்-2 ரகம் ஏற்றது. இந்த ரகம் 65 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடும். உளுந்தை தனிப்பயிராக விதைக்காமல், ஊடுபயிராகவும் விதைக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், 2013-2014 ம் ஆண்டில் 16,000 டன் விற்பனையாகி உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 74 கோடி ரூபாய். (குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 4,550 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 5,600 ரூபாய்க்கும் விற்பனையானது).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்