தினம் தினம் வருமானம்... கீரை தரும் வெகுமானம்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

*கீரைகளை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

*ஒரு கிலோ விதைக்கு 1,000 கட்டுகள் கீரை கிடைக்கும்.

*சத்தான சந்தை வாய்ப்பு.

*நாள் தோறும் வருமானம்.

தாவது நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால், அங்குள்ள மருத்துவர் சொல்லும் முதல் ஆலோசனை ‘உணவில் கீரை சேருங்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அதிக மருத்துவக்குணம் கொண்ட கீரை, மனித உடல் நலத்துக்கு மட்டுமல்ல அதை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கும் நன்மை கொடுக்கும் பயிர் என்றால், அது மிகையில்லை. ஆண்டு முழுவதும் வருமானம் கொடுக்கும் குறுகியகால பணப்பயிரான கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும்.

குறிப்பாக ஆண்டு முழுவதும் மிதமான சீதோஷ்ண நிலை இருக்கும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் கீரை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில், உடுமலை அடுத்துள்ள கிளுவன்காட்டூர் மகாலிங்கம், பழனியம்மாள் தம்பதி, தங்கள் நிலத்தில் ஆண்டுமுழுவதும் பல வகை கீரைகளைப் பயிர்செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள்.

விட்டு விட்டு பெய்யும் அடைமழைச் சாரலை பொருட்படுத்தாமல், கீரை அறுவடை மும்முரத்தில் இருந்த தம்பதியிடம் பேசினோம். அறுவடை செய்துகொண்டே பேசிய மகாலிங்கம், ‘‘இந்த கிளுவன்காட்டூர்தான் எங்களுக்கு பூர்வீகம். கிணத்துப்பாசனத்துல ஏழு ஏக்கர் நிலம் இருக்கு. ஒண்ணரை ஏக்கர்ல தக்காளி நட்டு இருக்கோம், ரெண்டு ஏக்கர்ல கரும்பு போட்டிருக்கோம், ரெண்டு ஏக்கர் நிலம் வெங்காயம் நடவு செய்ய தயாரா இருக்கு. மிச்சம் இருக்கிற ஒண்ணரை ஏக்கர்ல சுழற்சி முறையில மாத்தி மாத்தி தினசரி வருமானம் கொடுக்கிற கீரையைப் பயிர் செய்றோம். போட்டது வெளையுற வண்டல் மண்ணும், சர்க்கரையா இனிக்கும் கேணித்தண்ணியும், பட்டம் தவறாம கிடைக்கிற மழையும் தோதா அமைஞ்ச இந்தப் பகுதியில எந்த வெள்ளாமை செஞ்சாலும், செழிப்பா விளையும்.

கரும்பு நட்டவங்க, வருமானத்தைக் கண்ணுல பார்க்க ஒரு வருஷம் காத்திருக்கணும். அதுக்கு மேல கட்டுபடியாகிற விலையும் பல சமயம் கிடைக்கிறதே இல்லை. அதனால எங்களைப்போல நடுத்தர விவசாயிங்க கரும்பு சாகுபடி பரப்பளவைக் குறைச்சிட்டோம். குறுகிய நாள்ல வருமானம் கொடுக்கிற வெங்காயம், தக்காளி, பீட்ரூட், கீரைனு காய்கறி பக்கம் போயிட்டோம். அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை மூணையும் ஒண்ணரை ஏக்கர்ல மாத்தி மாத்தி பயிர் செய்றோம்’’ என்று மகாலிங்கம் சொல்ல, அறுவடை செய்த கீரைகளை அடுக்கியபடி பேச்சைத் தொடர்ந்தார் பழனியம்மாள்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்