பட்டையைக் கிளப்பும் கிச்சிலி சம்பா நெல்...

70 சென்ட்... 150 நாள்... ரூ 60 ஆயிரம்...துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

*வயது 135 முதல் 150 நாட்கள்.

*விதைநெல்லாக விற்றால், கூடுதல் லாபம்.

‘பருவத்தே பயிர் செய்’ என்பது மூத்தோர் வாக்கு. பாரம்பர்ய விவசாயத்தில் பட்டத்துக்கும், பாரம்பர்யத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எந்தெந்த பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அதை மட்டுமே பயிரிட்டார்கள். பசுமைப் புரட்சிக்கு பிறகு, பட்டம் மறந்து, பாரம்பர்யம் மறந்து, ரசாயனங்களைக் கொட்டியதால் மண் மலட்டுத்தன்மைக்கு ஆளாகிக் கிடக்கிறது.

ரசாயன உரத்தில் விளையும் பயிர்களில் நோய்த்தாக்குதல் அதிகமாகி பெருத்த நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள் விவசாயிகள். அதேநேரம் இயற்கை வழி விவசாயம் செய்பவர்கள் செலவைக் குறைத்து வரவை அதிகமாக்கி நஷ்டத்தைத் தவிர்த்து வருகிறார்கள். அந்த வகையில் இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு நெல் சாகுபடி லாபகரமாக மாறியிருப்பதாக மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலூகா, மேலகாண்டை கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்.

கிழக்குக் கடற்கரை சாலையுடன் மதுராந்தகத்தை இணைக்கும் கடலூர் (கிராமம்) மெயின் ரோட்டில் இருக்கிறது மேலகாண்டை கிராமம். இரண்டு பக்கமும் மரங்கள், எங்கு பார்த்தாலும் பசுமையான விவசாய நிலங்கள் சூழ்ந்த அழகான கிராமம். அடுத்த விதைப்புக்காக வயல் தயாரிக்க தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் தாமோதரன். அறுவடை செய்த நெல்லில் இருந்து விதைப்புக்காக நெல்லை தனியே பிரித்துக்கொண்டிருந்தார் தாமோதரனின் தந்தை பன்னீர். நம்மை கண்டதும் புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்கிய தாமோதரன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்