தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

காளான் உற்பத்தி!


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 21-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம்’, 29-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, முகவரி: திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. தொலைபேசி: 04285-241626.

சிப்பிக்காளான்!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூன் 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘பீஜாமிர்தம் தயாரித்தல்’ 29-ம் தேதி, ‘சிப்பிக்காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சி இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716

பால் பொருட்கள் உற்பத்தி!


பெரம்பலூர், கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 14, 15-ம் தேதிகளில், ‘மதிப்புக்கூட்டிய பால் மற்றும் பால்பொருட்கள் தயாரிப்பு’,21, 22-ம் தேதிகளில், ‘கறவை மாடு வளர்ப்பு’28, 29-ம் தேதிகளில், ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி - 04328-291459.

கறவை மாடு வளர்ப்பு!


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 21-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’, 28-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

நாட்டுக்கோழி வளர்ப்பு!

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 14-ம் தேதி, ‘தீவன உற்பத்தி மற்றும் சாகுபடி முறைகள்’ 21-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249

தீவன உற்பத்தி!


சேலம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன்  14-ம் தேதி, ‘தீவன உற்பத்தி மற்றும் சாகுபடி முறைகள்’, 21-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

பரண் மேல் ஆடு!


நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 14-ம் தேதி, ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு’ 20-ம் தேதி, ‘கொடுவாய்மீன் வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘கொடிவகைக் காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

கட்டணப் பயிற்சிகள்

அசோலா பயிற்சி!


கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூன் 25-ம் தேதி, ‘அசோலா கால்நடைத்தீவனப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்: `100 முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652-246296.

பழக்கன்றுகள் உற்பத்தி!

அரியலூர் மாவட்டம், சோழன்மா தேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 21-ம் தேதி ‘பழக்கன்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை’ 28-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். பயிற்சிக் கட்டணம்: `100

தொடர்புக்கு, செல்போன்: 97512-80089, 96559-26547

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.


உலக இயற்கை விவசாயிகள் மாநாடு!

புதுடில்லியில், சர்வதேச இயற்கை வேளாண்மை இயக்கமும், இந்திய இயற்கை உழவர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விவசாயிகளின் அனுபவ உரைகளுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

விவசாயிகள் தங்களின் சிறந்த அனுபவங்கள், கண்டறிதல்கள், கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள், இடுபொருட்கள், தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைச் சமாளித்த விதங்கள் என பல வகையான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், கருத்தரங்கு இருக்கும்.

தமிழ்நாட்டில் இருந்து கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கருத்துரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில்... 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் எழுதி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்புக்கு அனுப்ப வேண்டும். இயற்கை விவசாயத்தில் நீண்டகாலம் இயங்கி வரும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்பட்ட கருத்துரைகள் தமிழில் இருந்தால், அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். அங்கு தேர்வு செய்யப்பட்டால், அக்கருத்துரைகளை உலக இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பேச வாய்ப்பளிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, தலவு மலை, அறச்சலூர் 638101. 

செல்போன்: 94436-63562.  

மின்னஞ்சல்: organicalert@gmail.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick