பஞ்சகவ்யா - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி, க.சத்தியமூர்த்திபுழுதி சாகுபடிக்குக் கைகொடுத்த பஞ்சகவ்யா!

ஞ்சகவ்யா உருவான விதம், ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வரிசையில் இந்த இதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், கரூர் மாவட்டம், நடையனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி எம்.சேதுபதி.

“எனக்கு மொத்தம் 10 ஏக்கர் நஞ்சை நெலம் இருக்கு. கரும்பு, நெல், மரவள்ளினு போகம் தவறாமல் வெள்ளாமை செய்றேன். காவிரிப்பாசனம்தான் பிரதானம். கிணறும் இருக்கு.

1998-ம் வருஷம் வரைக்கும் நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். இயற்கை விவசாயம் செய்ய ஆசை இருந்தாலும், அதுக்கான வழி கிடைக்கல. ஒருசமயம், தமிழ் வாத்தியாரான புலவர் கருப்பண்ணன் என்னைப் பார்க்க வந்தார். அவர், என் வயலுக்குப் பக்கத்துல விவசாயமும் செஞ்சுகிட்டிருந்தார். கொடுமுடி டாக்டர் நடராஜனுக்கு அவர் சம்பந்தி. அவர் எதையுமே மாத்தியோசிக்கக்கூடிய மனுஷன். அவரு வந்தப்போ என்னோட வயல்ல  பசுந்தாள் உரம் போட்டு சேத்துழவு அடிச்சிகிட்டிருந்தேன். வரப்புல நின்னு பேசிகிட்டிருந்தவர், அப்படியே பேச்சுவாக்குல... டாக்டர் குறித்தும், பஞ்சகவ்யா குறித்தும் சொன்னார். ‘பஞ்சகவ்யா எல்லா பயிர்களுக்கும் உகந்த இயற்கை இடுபொருளா இருக்குது’னும் சொன்னார்.

இயற்கை விவசாயத்துக்கு வழி கிடைச்சுடுச்சுனு சந்தோஷபட்டு மறுநாளே டாக்டர் நடராஜனைப் பார்க்கக் கிளம்பிட்டேன். ‘சம்பந்தி சொல்லிவிட்டாரா, சந்தோஷம்’ என்றவர், பஞ்சகவ்யா கரைசல் குறித்து விவரமாகச் சொன்னார். அப்படியே, ‘முன்னோடி விவசாயி செல்லமுத்துவைப் போய் பார்த்துட்டுப் போங்க’னு சொன்னார்.

செல்லமுத்து தோட்டத்துக்குப் போனதும், அவர் பஞ்சகவ்யா தயாரிக்கிறது குறித்தும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கிறது குறித்தும் தெளிவா சொல்லிக் கொடுத்தார். அவர் மூலமாதான் நம்மாழ்வார் அய்யாவைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். அந்த சமயம் குளித்தலை பக்கத்துல ஒரு கிராமத்துக்கு நம்மாழ்வார் அய்யா வர்றார்னு தெரிஞ்சுகிட்டு அந்தக் கூட்டத்துக்குப் போனேன். 

நம்மாழ்வார் இயற்கை விவசாயம் சம்பந்தமா நிறைய விஷயங்களைப் பேசினார். மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், அரப்புமோர்க் கரைசல்  தயாரிக்கிற விதங்கள், இருமடிப்பாத்தி அமைக்கிறது குறித்தெல்லாம் விவரமா சொன்னவர், அப்படியே வயல்வெளிக்குக் கூட்டிட்டுப் போய் பூச்சிவிரட்டிக்கான இலைதழைகளை எல்லாம் அடையாளம் காட்டினார். எல்லாத்தையுமே உடனடியா என்னோட வயல்ல நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சேன். தொடர்ந்து நம்மாழ்வார் அய்யா கலந்துக்கிற கூட்டங்களுக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன்.

கரும்பு, நெல், வாழைனு எல்லா பயிர்களுக்கும் மத்த இடுபொருட்களோட சேர்த்து பஞ்சகவ்யாவையும் பிரதானமா பயன்படுத்த ஆரம்பிச்சேன். டாக்டர் நடராஜன், என் தோட்டத்துக்கு வந்தும் சில ஆலோசனைகளைச் சொன்னார். என்னோட தீவிர இயற்கை விவசாய ஆர்வத்தைக் கேள்விப்பட்டு  திடீர்னு  ஒருநாள் நம்மாழ்வார் அய்யா என் வயலுக்கு வந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு. பாசனத்தண்ணீர் பத்தாக்குறையா இருந்த காலம் அது. வந்தவரு என்னோட பத்து ஏக்கர் நெலத்தையும், சுத்திப் பார்த்தாரு. நான் தயாரிச்சு வெச்சிருக்கிற பஞ்சகவ்யா கரைசல், அதை பயிர்களுக்குக் கொடுக்கிற விதத்தையெல்லாம் கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்