ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

*குளிர் பருவப்பயிர்...

*குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு 650 கிலோ மகசூல்...

*அதிக புரதம் கொண்டது...

*ஒரு குவிண்டால் 4,800 ரூபாய்...

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலைகிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில், கொண்டைக்கடலை பற்றிய தகவல்கள் இடம்பிடிக்கின்றன.

கொண்டைக்கடலை (சுண்டல்) என்பது ‘பேபேசி’ குடும்பத்தைச் சார்ந்தது. இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக்கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் கொண்டைக்கடலை உற்பத்தியில், இந்தியாவே முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது, கொண்டைக்கடலை.

கொண்டைக்கடலை ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், சென்னா என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் அதிகம் விளைவதால் இந்தப் பெயராக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தோல் நீக்கி வறுத்து உடைக்கப்பட்ட கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, உடைத்தகடலை, வறுகடலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, சட்னி தயாரிக்க பிரதானமாகப் பயன்படுகிறது. முறுக்கு, தட்டை என பலகாரகங்கள் தயாரிப்பில் அதிகமாக எண்ணெய் குடிக்காமல் இருக்க, பொட்டுக்கடலை மாவு சேர்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில், பொட்டுக்கடலையில் செய்யப்படும் ‘பருப்புப் பொடி’ மிக பிரபலம். சாதத்தில் பிசைந்து உண்ணப்படும் இப்பொடி, காரமாக, சுவையாக இருப்பதால் ‘கன் பவுடர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கொண்டைக்கடலை, ஒரு குளிர் பருவப்பயிர். கொண்டைக்கடலையில் ‘தேசி கடலை’ (நாட்டுக்கடலை) மற்றும் ‘காபூலி கடலை’ என்னும் இரு வகைகள் உள்ளன. ‘காபூலி’ கடலை வெள்ளையாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் ‘தேசி கடலை’ வகை பிரசித்திபெற்றது. இதுதான், தமிழ்நாட்டில் அதிகம் பயிரிடப்படுகிறது. கரிசல் மண்ணில் விளையும் இப்பயிர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும்; ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. தோராயமாக, தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கொண்டைக் கடலை பயிரிடப்படுகிறது. ஹெக்டேருக்கு சராசரியாக 650 கிலோ மகசூல் கிடைக்கும். குளிர்கால பயிர் என்றாலும், மிக அதிக குளிரும், உறைபனியும் பயிரை பாதிக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்