மா, மாடு, ஆடு, கோழி... பண்ணைக்குட்டைப் பாசனத்தில் செழிக்கும் பண்ணை!

ஆர்.குமரேசன், படங்கள்: உ.பாண்டி

*பண்ணைக் குட்டை மூலம் மா சாகுபடி

*கிளி மூக்கு ரகம் அவசியம்

*கவாத்து செய்தால், தண்டுத் துளைப்பான் வராது.

*அடர்நடவிலும் இடைவெளி அவசியம்

*ஆகஸ்ட் மாதத்தில் கவாத்து

ல்ல மண் வசதி, பாசன வசதி இருக்கும் இடங்களிலே கூட விவசாயம் சவாலாக இருக்கும்போது... வறட்சிப் பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால், பெரும் முயற்சிக்கு பிறகு, பாறைகளிலும் தாவரங்கள் வளர்வதைப் போல... கடும் போராட்டங்களுக்குப் பிறகு, வறட்சிப் பகுதிகளிலும் விவசாயத்தைச் செழிக்க வைக்கிறார்கள், விவசாயிகள். அதற்கு ஓர் உதாரணம்தான், ராமநாதபுரம் மாவட்டம், பஞ்சம்தாங்கி கிராமத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணை.

திருப்புல்லானியிலிருந்து பெரியபட்டினம் செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, பஞ்சம்தாங்கி கண்ணுக்கெட்டிய தூரம் வரை, சீமைக்கருவேல மரங்களும், பனை மரங்களும்தான் காட்சியளிக்கின்றன. கடும்வறட்சி காரணமாக மண் வறண்டு கிடக்கிறது. இவற்றுக்கு நடுவில்தான் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கிறது, அருளின் மாந்தோப்பு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை. நுழைந்த உடனேயே எதிர்கொள்கிறது, சூரிய மின்சார பாசன வசதியுடன் கூடிய பெரிய அளவிலான பண்ணைக்குட்டை.

நாம் சென்றிருந்த நேரத்தில், மாங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார், பண்ணையின் பணியாளர் ராணி. “அருள் அண்ணன்தான் தோட்டத்துக்குப் பொறுப்பு. அவங்க வெளியூர் போயிருக்காங்க. அவர்கிட்ட விவரம் கேட்டுக்கங்க” என்று அவரது செல்போன் எண்ணைக் கொடுத்தவர், “இது, தண்ணி தட்டுப்பாடான ஏரியா. பண்ணைக்குட்டையில இருக்கிற தண்ணியை வெச்சுதான் வெவசாயம் நடக்குது. போன வருஷம் மா நல்லா காய்ச்சிருந்துச்சு. இந்தத் தடவை சுமார்தான். இங்கேயே வந்து காய்களை வாங்கிட்டுப் போயிருவாங்க. அதுக்காகத்தான் இப்போ, காய் பறிச்சுகிட்டு இருக்கோம்”என்றார். அங்கிருந்தே நாம் அருளிடம் செல்போனில் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்