கார்ப்பரேட் கோடரி - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உலகப்பசி தீர்ப்போமா? அல்லது ‘கார்ப்பரேட் அடிமை’ ஆவோமா?‘சூழலியலாளர்’ நக்கீரன், ஓவியம்: ஹரன்சுற்றுச்சூழல்

*வளரும் நாடுகளிலுள்ள ஒர் உழவனின் ஒரு நாளைய சராசரி வருமானம் 2 டாலர். ஆனால், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் மானியம் 3 டாலர்.

*குடகு மலையைச் சீரழித்து தேயிலை நட்டபோதும், சோலைக்காடுகளை அழித்து தைல மரங்களை நட்டபோதும், காவிரிப்படுகை உழவர்கள் கவலைப்படவில்லை. விளைவு, இன்று காவிரியில் நீரைக் காணோம்.

*இயற்கை வேளாண்மைக்கே கூட காலநிலை மாற்றம், பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் சராசரியாக ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உயரப் போகிறது.

*நம்மிடம் கைநீட்டிக் கெஞ்ச வேண்டிய அந்நாடுகள், நமக்கு கை தட்டி உத்தரவிடுகின்றன.

ரு பேராசிரியர் தம் மாணவர்களுடன் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீரியமிக்க ஓர் அமிலம் தரையில் கொட்டி விட்டது. உடனே அந்்தப் பேராசிரியர் மாணவர்களை எச்சரித்து, ஆய்வகத்திலிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான அந்த அமிலத்தை அப்புறப்படுத்தும் புதிய வேதிப்பொருளைத் தயாரிக்க வேண்டும். கொட்டிய அமிலத்தின் மூலக்கூறுகளை, எந்த வகை மூலக்கூறுகளைக் கொண்ட வேதிப்பொருளால் அழிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க, மூலக்கூறு விளக்கப் படங்களை வரைந்தார். பிறகு ஒரு வழியாக, புதிய வேதிப்பொருளுக்கான சூத்திரத்துடன் அனைவரும் ஆய்வகம் திரும்பினர். ஆனால், அங்கு அமிலம் கொட்டிய இடம் துடைக்கப்பட்டு காலியாக இருந்தது. அதிர்ச்சியடைந்த பேராசிரியர், ‘ இதை யார் துடைத்தது?’ எனக் கேட்க, அங்கிருந்த ஆய்வகத் தொழிலாளி, ‘நான் தான் துடைத்தேன்’ என்றார். பேராசிரியருக்கோ பெரும் வியப்பு. ‘என்ன சூத்திரம் பயன்படுத்தினாய்?’ எனக் கேட்டார். அதற்கு அந்தத் தொழிலாளி சொன்னார், ‘ஒரு விளக்கமாறும், ஒரு வாளித் தண்ணீரும்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்