‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

ந்தியாவின் வடமேற்குப் பகுதியில், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ள மாநிலம், பஞ்சாப். இது 50 ஆயிரத்து 362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மாநிலத்தில், மால்வா மண்டலத்தில் உள்ள பத்திண்டா, மான்சா, பரித்கோட், பெரோஸ்பூர், முக்த்சார், மோகா, பர்னாலா மற்றும் சங்ரூர் ஆகிய 8 மாவட்டங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிகை அதிகம். இப்பகுதிகளில் பி.டி பருத்தி அதிகம் பயிரிடப்படுகிறது. இதைத்தவிர நெல், கோதுமை மற்றும் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

மால்வா மண்டலத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய ரயில் நிலையம் பத்திண்டா. பஞ்சாப் மாநிலத்தின் புற்றுநோயாளிகளை அழைத்துச் செல்லும், ‘அபோகர் ஜோத்பூர் பயணிகள் ரயில்’  இந்த வழியாகத்தான் செல்கிறது. இதைத்தான் கேன்சர் ரயில்’ (மரிசோன் கி ட்ரைன்) என்று அழைக்கிறார்கள். இங்கே ரயில் ஏறி, ராஜஸ்தான் மாநிலம் பிக்கானேர் நகருக்குச் சென்று... அங்கு மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியோடு அடங்கிய புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பத்திண்டாவிலிருந்து தினமும் 8 ரயில்கள் பிக்கானேர் வழியாகச் செல்கின்றன. இதில் இரவு 9.30 மணிக்குப் புறப்படும் ரயிலில் புற்றுநோய் நோயாளிகள் அதிகம் செல்கிறார்கள். இந்த ரயில் பத்திண்டாவுக்கு அருகில் உள்ள அபோகரிலிருந்து ஜோத்பூர் செல்லும் பயணிகள் ரயில். இந்த ரயிலில் டிக்கெட் விலை குறைவு என்பதால், அதிகம் பேர் பயணிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்