‘‘மாசியில் கோட்டை கட்டணும், ஆடியில் விதைக்கணும்..!’’

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

ண்மையில் ‘பாரம்பர்ய இயற்கை விவசாயமும் மருந்தில்லா மக்கள் நல வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு திருநெல்வேலியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ‘நெல்லை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’, ‘நல்லமுத்து இயற்கை வேளாண் ஆய்வு மையம்’ மற்றும் ‘புளியங்குடி தங்கம்மாள் அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு, தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய காவல்துறைத் தலைவர் முருகன், ‘இப்போ யாருமே பாரம்பர்ய நெல் ரகங்களை அதிகம் சாகுபடி செய்யுறதில்லை. அந்த அரிசியில இயற்கையாவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். ‘பாரம்பர்ய நெல் ரகங்களின் கதிர்களே கத்தி மாதிரி கூர்மையா இருக்கிறதுனால பூச்சித்தாக்குதல் வராது’னு ‘பசுமை விகடன்’ல வந்த ‘பூச்சிகளும் நண்பர்களே’ தொடர்ல விரிவா எழுதியிருக்காங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்