செழிக்கும் சிறுதானியம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘சிறுதானியங்கள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல, காலநிலை மாறினாலும் தாக்குப்பிடித்து மகசூல் தரவல்லவை’’

என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சிறுதானியங்களுக்கு மகுடம் சூட்டியுள்ளார். இதற்கு மூலக்காரணம்

தமிழ்நாட்டில் 2010-11, ஆண்டுகளில் 15.58 லட்சம் டன் என்ற அளவில் இருந்த சிறுதானிய உற்பத்தி, 2014-15, ஆண்டுகளில் 40.75 லட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளில் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறுதானியங்கள் விஷயத்தில் அரசு அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், முன்னோடி விவசாயிகளும், ‘பசுமை விகடன்’ உள்ளிட்ட பத்திரிகைகளும் சிறுதானியங்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்தன. விவசாயிகளின் கவனத்தை சிறுதானியங்கள் மீது திருப்பி வந்தன. இதன் பலனாகத்தான் சிறுதானியங்கள் உற்பத்தியின் வேகம் கூடியுள்ளது.

நம் மாநில அரசு ஊக்கப்படுத்தாமல் உள்ளபோதே, நம் விவசாயிகள் உற்பத்தியை அள்ளி குவித்துள்ளார்கள். ஒரு வேளை அரசு ஊக்கப்படுத்தியிருந்தால்..?

இதற்கு உதாரணம் பக்கத்தில் உள்ள கர்நாடக மாநிலம்தான். கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை பொது விநியோகத் திட்டத்தில் சேர்த்து, சிறுதானியங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள் அம்மாநிலத்தில். இதன் மூலம், அந்த மாநில விவசாயிகளுக்கு நல்ல விலையும், மக்களுக்கு சத்து நிறைந்த உணவும் கிடைத்து வருகிறது.

நாம் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறோம்.?

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்