மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

குமரகம்...

அவ்வப்போது, பத்திரிகையில அடிபடுற பேரு. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில வேம்பனாடு காயல் கரையில் இருக்கிற அழகான ஊர். காயல்னா, ‘நல்ல தண்ணி ஏரி’னு அர்த்தம். இந்த குமரகம் பிரபலமானத்துக்கு சினிமா நடிகருங்க, அரசியல்வாதிங்க முக்கிய காரணம். அவங்கள்லாம், தங்களோட   உடம்புக்கு  புத்துணர்ச்சி உண்டாக்கிக்கிறதுக்காக  தேடி வர்ற இடம், இந்த குமரகம்!

நான் போயிருந்த நேரத்துல ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளும் வந்திருந்தாங்க. படகு வீடு, பசுமை நிறைந்த ரிசார்ட்டுனு விலைக்குத் தக்கப்படி விடுதிங்க இருக்கு. எல்லாரும், ஏ.சி வைச்ச ரிசார்ட்டு பக்கம் போக, ஒரு வெளிநாட்டுக் குழு மட்டும், எங்களுக்கு பாரம்பர்ய கேரள வீடு வேணும்னு அடம்பிடிச்சாங்க. நானும் அவங்க கூடவே ஒட்டிக்கிட்டேன். நூறாவது வருஷம் கொண்டாடப்போற ஒரு ஓட்டு வீட்டுக்கு எங்க எல்லாரையும், கூட்டிக்கிட்டுப் போனாங்க.

வெளிநாட்டுக்காரங்க, ‘வெரி நைஸ், வெரி நைஸ்’ னு சொல்லிக்கிட்டு உள்ளே போனாங்க. ஆனா, எனக்கு மட்டும் அந்த வீடு புடிக்கல.

பல்லி, சிலந்தி... னு வீட்டுக்குள்ள பல்லுயிர்களோட நடமாட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த நேரத்துல, தாடியும், கையில மூலிகை மருந்துப் பெட்டியையும் வைச்சுக்கிட்டு கேரளாவைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்து நின்னாரு. பார்த்த மாத்திரத்திலேயே, அவரு ஆயுர்வேத மருத்துவர்னு தெரிஞ்சது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்