‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

பஞ்சாப் மாநில விவசாயியின் எச்சரிக்கை! ‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்! ‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

*பஞ்சாபின் சுற்றுச்சூழல் நஞ்சாகி விட்டது.

*கனமான ரசாயனங்கள் அதிகம் கலந்துள்ளன.

*இந்திய நிலப்பரப்பில் பஞ்சாப் 2 %. ஆனால், இந்திய விவசாய ரசாயனப் பயன்பாட்டில் 18 %

ஞ்சாப் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த துயரச் செய்தியை கடந்த இதழில் பார்த்தோம். பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும்... மண்ணுக்கும் மனிதர்களுக்கும் விளைவித்து வரும் தீங்குகளுக்கு கண்முன் சாட்சியாக நிற்கிறார்கள், பஞ்சாப் மாநில மக்கள். அவற்றின் தீங்கை உணர்ந்த அம்மக்கள், தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பி வருகிறார்கள். அப்படி மாறி வருபவர்களில் ஒருவர்தான் பர்னாலா மாவட்டம், பரவாஹாய் கிராமத்தைச் சேர்ந்த ரவ்தீப் சிங். இவர், பசுமைப் புரட்சிக்காக தன் தாயைப் பறிகொடுத்தவர். இயற்கை விவசாயம்தான் இனி விவசாயிகளை காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புவதோடு... தனக்குத் தெரிந்த இயற்கை விவசாய முறைகளை மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தனது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து வருகிறார், ரவ்தீப் சிங்.

“எம்.ஏ பாதுகாப்புத் துறை படிப்பைப் படித்து விட்டு ‘வேலைக்குப் போக வேண்டும்’ என்கிற கனவோடு இருந்தேன். 2009-ம் ஆண்டு, எனது தாய்க்கு உடலில் கல் போன்று புற்றுநோய் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டேன். ‘எங்கள் பரம்பரையில் யாருக்கும் புற்றுநோய் கிடையாது. பிறகெப்படி வந்தது?’ என்று டாக்டரிடம் கேட்டோம். ‘உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல் முழுவதும் கெட்டுப் போய் கிடக்கிறது. இதில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம்’ என்றார். அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே எனது தாய் இறந்து விட்டார். அதன்பிறகுதான், ‘குறைந்தபட்சம் நமக்குத் தேவையான உணவையாவது நல்ல முறையில் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்தேன். வீட்டுக்குத் தேவையான கோதுமை, நெல், காய்கறிகளை இயற்கை முறையில் விளைவிக்க ஆரம்பித்தேன். வேலை பற்றிய கனவை விட்டுவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மொத்தமுள்ள 12 ஏக்கர் நிலத்தில் கோதுமை, பாசுமதி நெல், கடுகு, காய்கறிகள், மலர்கள் என சாகுபடி செய்து வருகிறேன். ஜீவாமிர்தம், ராக் சால்ட், பயோ பூச்சிவிரட்டிகளைத்தான் பயன்படுத்துகிறேன். சாணத்துக்காகத் தனியாக நாட்டு மாட்டையும் வளர்த்து வருகிறேன். காரிஃப் பருவத்தில் நெல்லும், அடுத்து வருகிற ரபி பருவத்தில் கோதுமையும் பயிர் செய்வேன். எனது பண்ணையில் நெல், கோதுமை இரண்டுக்கும் சேர்த்து... இயற்கை இடுபொருட்களுக்காக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு செய்கிறேன். ஆனால், ரசாயனம் பயன்படுத்தினால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தில் குறைந்த செலவுதான் ஆகும் என பல விவசாயிகளுக்குச் சொல்லியும் வருகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்