பஞ்சகவ்யா - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய், க.சத்தியமூர்த்தி

மல்லிகையில் மட்டுமல்ல... வாழ்விலும் மணம் கூட்டிய பஞ்சகவ்யா...

*நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் கூடுதல் பலன்.

*விளைச்சல் அதிகரிக்கும்.

*40% உரச்செலவுகள் குறையும்.

*பூச்சி, நோய்கள் தாக்காது.

ரோடு மாவட்டம், கருக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் வாழ்க்கையில் பஞ்சகவ்யா ஏற்படுத்திய இனிய மாற்றம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து, கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரைப் பற்றி நமக்கு அறிமுகம் கொடுத்தார், டாக்டர்.நடராஜன். உடனே, கரட்டுப்பாளையத்துக்குப் பயணமானோம்.

வளைந்து நெளிந்து ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் இருக்கும் அழகிய ஊர், கரட்டுப்பாளையம். வாய்க்கால் கரையில் சிறிது தூரம் நடந்தால், அதிலிருந்து பிரிந்து செல்லும் ஒத்தையடிப்பாதையின் இருபுறமும் மலர்ந்து நிற்கிறது, ஈஸ்வரமூர்த்தியின் மஞ்சள் காடு. வாய்க்கால் தண்ணீரை, வழிய வழிய மஞ்சள் காட்டுப் பாத்திகளில் நிரப்பிக் கொண்டிருந்தார், ஈஸ்வரமூர்த்தி. அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... “வாங்க, வாங்க... நீங்க வருவீங்கனு டாக்டர் போன் போட்டு சொல்லிட்டாருங்க” என்று வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்