தேங்காய்க்கு மரியாதை!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தேங்காய் எண்ணெய் அற்புத மருத்துவக் குணம் நிறைந்த உணவுப் பொருள் என்று ஆயுர்வேதமும், சித்த மருத்துவம் சொல்கின்றன. கேரள மாநில மக்கள், திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தேங்காய் எண்ணெயும் முக்கிய காரணம் என்பது பலகாலமாக சொல்லப்பட்டு வரும் விஷயம். இதுபோன்ற காரணங்களால்தான் ‘தேங்காய் எண்ணெயை உணவுக்குப் பயன்படுத்துங்கள்’ என்று தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது மத்திய தென்னை வளர்ச்சி வாரியம்! ஆனால், நம்முடைய தமிழக அரசோ... மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து, ‘உங்களுக்காக மானிய விலையில் பாமாயிலைக் கொடுக்கிறோம்’ என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறது.

‘‘மருத்துவக் குணம் வாய்ந்த சிறப்பான தேங்காய் எண்ணெய் உள்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. தென்னை விவசாயத்துக்கு மானியம் கொடுத்தால், உள்ளூர் விவசாயிகளுக்கும் நன்மை... தேங்காய் பொருட்களை வாங்கி உண்பவர்களுக்கும் நன்மையாக இருக்கும். ஆனால், ‘உடல் நலத்துக்கு கேடு’ என்று வர்ணிக்கப்படும் பாமாயிலை எதற்காக இறக்குமதி செய்யவேண்டும்?’’ என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரே,  மாநில அரசைக் குட்டிக் காட்டி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை வேறு பிடித்துள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்