பஞ்சகவ்யா - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்கொத்துக் கொத்தாய் முருங்கைக்காய்கள்... பஞ்சகவ்யாவின் மகிமை! ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

ஞ்சகவ்யா உருவான விதம் ஆரம்பகாலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வரிசையில் இந்த இதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், ஈரோடு மாவட்டம், பரஞ்சேர்வழி அடுத்துள்ள நல்லூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை ஆர்வலர்’ பார்த்திபன்.

இவருக்கு ‘பாமர தீபம்’ பார்த்திபன் என்கிற அடைமொழிப் பெயரும் உண்டு.

அவர் சொல்வதைக் கேட்போமா....

“எனக்கு நேரம் கிடைக்கிற போதெல்லாம் என்னோட அத்தை வீட்டுக்கு போய் அவங்களை பாத்துட்டு வருவேன். அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, முருங்கைக்காய் சாம்பார் வெச்சு மதிய சாப்பாடு கொடுத்தாங்க. அது அபாரமான ருசியா இருந்துச்சு. நிறையக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். அப்போ, அந்த காய் எந்த ஊர் காய்னு விசாரிச்சப்போ... ‘இது சந்தையில வாங்கினது இல்லை. ஆஸ்பத்திரியில இருந்து வந்தது’னு சொன்ன அத்தை, 

‘உடம்புக்கு கொஞ்சம் முடியலை. அதனால, கொடுமுடி ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க ஆஸ்பத்திரி தோட்டத்துல இருந்த முருங்கை மரத்துல ஜடை ஜடையா காய் தொங்கிட்டு இருந்திச்சு. அது குறித்து டாக்டர். நடராஜன்கிட்ட கேட்டப்போ, பஞ்சகவ்யாவில் விளைஞ்ச முருங்கைக்காய்னு சொல்லி கொஞ்சம் காய் கொடுத்தார். அதுதான் இது’னு சொன்னாங்க.

அந்த முருங்கை மரத்துல ஒரு குச்சியை உடைச்சிட்டு வரணும்னு நினைச்சு... சாப்பிட்ட கையோட,  ஆஸ்பத்திரிக்கு போய்ட்டேன். அங்க முருங்கை மரங்களைப் பார்த்து அசந்து போய்ட்டேன். நூத்துக்கணக்கான பச்சைப் பாம்புகள் தொங்கற மாதிரி தரைய தொடுற அளவுக்கு காய்கள் தொங்குச்சு. டாக்டர் நடராஜன்கிட்ட முருங்கை குறித்து கேட்டேன்.

அப்பதான் பஞ்சகவ்யா குறித்து டாக்டர் எனக்குச் சொன்னார். அதைத் தயாரிக்கிற முறை, பயன்படுத்துற முறை, அதோட பலன்கள் எல்லாத்தையும் விலாவாரியா பொறுமையா சொல்லிக் கொடுத்து முருங்கை விதைக் குச்சிகளையும் கொடுத்து அனுப்பினார். அந்த விதைக்குச்சிகளை நட்டு... பஞ்சகவ்யா தயாரிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒன்றரை வருஷத்துல என் வீட்டுலயும் முருங்கை காய்ச்சு குலுங்க ஆரம்பிச்சது. அப்போதான் பஞ்சகவ்யாவோட மகிமையை நான் புரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் சிகரெட் பிடிச்சுடுவேன். அதனால, எனக்கு தொண்டையில வலி வந்து எரிச்சல் ஏற்பட்டுடுச்சு. உள்ளூர்ல பார்த்த வைத்தியத்துக்கெல்லாம் பலனில்லை. ஒரு டாக்டர் மூலமா, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குப் போனப்போ, சோதனை பண்ணிட்டு... எனக்கு உணவுப்பாதையில  புற்று நோய் அறிகுறி இருக்குனு சொன்னாங்க. அதுக்கு சிகரெட் முக்கிய காரணம்னும் சொன்னாங்க. அப்போ, இருந்து சிகரெட்டை விட்டுட்டேன். தொடர்ந்து மருந்துகளை எடுக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் குடல் புண் முழுமையா ஆறலை.

அந்த சமயத்துலதான், கொடுமுடி டாக்டர் மூலமா,  நம்மாழ்வார் அய்யா நடை பயணம் தொடங்கப் போறார்ங்கிற தகவல் கிடைச்சது. பவானி சாகர் அணையில் தொடங்கி  கொடுமுடியில் முடிஞ்ச, அந்த ஒரு மாச இயற்கை விழிப்பு உணர்வு நடை பயணத்தில் நானும் கலந்துக்கிட்டேன். அப்போதான் அய்யாகிட்ட நெருங்கிப் பழகுற வாய்ப்பு கிடைச்சது. அப்போ, என்னோட புற்று நோய் பிரச்னையையும் அவர் தெரிஞ்சுக்கிட்டார்.

அவர்தான், ‘இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறிடுங்க,  வந்த நோய்களையும் வரப்போகும் நோய்களையும் தடுக்கும் சக்தி அதுக்கு உண்டு’னு சொல்லி, திருநெல்வேலி, சிவசைலம் இயற்கை வாழ்வியல் மருத்துவமனை குறித்து சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்