‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்பசுமைப் புரட்சியின் சீரழிவுக்கு பஞ்சாப்தான் உதாரணம்!த.ஜெயகுமார்குறுந்தொடர்

*பஞ்சாபில் டிராக்டர் என்பது கௌரவத்தின் அடையாளம்

*பஞ்சாபில் ஒரு விவசாயக் குடும்பத்தின் கடன் சுமை 1,78,934 ரூபாய்

*நிலைத்த நீடித்த வேளாண்மைதான் பஞ்சாப்புக்கு தேவை

சுமைப் புரட்சியால் பஞ்சாப் மாநிலத்துக்கு ஏற்பட்ட அவல நிலைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அம்மாநிலத்தில் ரசாயன விவசாயத்தின் விளைவுகளால்... மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் மண், நீர் போன்றவை நஞ்சாகிப் போனதையும் உலகுக்கு தெரியப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது, ‘கேத்தி விர்ஷாத் மிஷன்’ (Kheti Virsat Mission)என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ‘உமேந்திரா தத்’திடம் பேசினோம். “இந்தியாவில் உணவு என்பது மிகப் பெரிய அரசியல் பிரச்னை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்... உணவு உற்பத்தியை அரசியல் பிரச்னையாகவே பார்க்கிறது. இதில் எந்த சுணக்கம் நிகழ்ந்தாலும், மற்ற கட்சிகள் கிழித்து, தோரணம் கட்டிவிடும் என்று நினைக்கிறார்கள். மண், மக்கள், உயிரினங்கள், சுற்றுச்சூழல் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள், ஆட்சியாளர்கள். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அதனால் மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சுகாதாரத்துறை கொஞ்சமும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. பஞ்சாப் மாநிலத்தில் இத்தனை உயிர் இழப்புகளுக்கு, யார் பொறுப்பேற்பது? இன்று அழிந்து கொண்டிருக்கும் இயற்கையைக் காப்பாற்ற போவது யார்? என்பதெல்லாம் விடையற்ற கேள்விகள்.
 
பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக நெல் ஆராய்ச்சி நிலையமே, பசுமைப் புரட்சி குறித்து சொல்லும்போது ‘ஆசியாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பரப்பியது பெரிய தவறு. இதைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நேரமும், பணமும் வீண்’ என்று தெரிவித்துவிட்டது. இருந்தும் வேளாண் பல்கலைக்கழகங்கள், பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் மீது திணித்துக் கொண்டுதானிருக்கின்றன. அடுத்தக் கட்டமாக மரபணு மாற்று விதைகளைக் கொண்டு வர நினைக்கிறது” என்று சாடினார்.

உணவு மற்றும் பொருளாதார கொள்கை ஆய்வாளர் தேவிந்தர் சர்மாவிடம் பேசியபோது,  “கடந்த 40 ஆண்டுகளாக பஞ்சாப் விவசாயிகளை உயர்த்தியே பேசி வந்திருக்கிறது, நாடு. பத்திரிகைகள் கூட அங்கே தீவிர விவசாயம் நடைபெற்று வருவதாகவே சொல்கின்றன. கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் எல்லோரும் பஞ்சாப் குறித்தே பேசி வருகிறார்கள். ஆனால், அந்தக் காலம் முடிந்து போய் விட்டது. பஞ்சாபில் ஒரு விவசாயக் குடும்பத்தின் கடன் சுமை 1 லட்சத்து 78 ஆயிரத்து 934 ரூபாய். கடந்த சில ஆண்டுகளாக இது அதிகரித்தே வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்