வேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை

#whowantmyvoteதேர்தல் பார்வை படம்: வீ.சக்தி அருணகிரி

தோ தேர்தல் வந்துவிட்டது. விவசாயக் கடன், பம்ப் செட்டுக்கு இலவச மின் இணைப்பு... என நீங்கள் தேடித் தேடிச் சென்றபோது உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் இப்போது உங்களைத் தேடி உங்கள் வாசலுக்கே வருகிறார்கள். அவர்களிடம், ‘செய்வதாகச் சொன்னீர்களே... செய்தீர்களா’ என கேளுங்கள். எங்கள் ஓட்டு வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்யுங்கள்’ என உங்களின் தேவையைச் சொல்லி கட்டளையாக... மக்கள் கட்டளையாக உத்தரவிடுங்கள்.

*முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள முன்னோடி விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் மக்கள் கட்டளையாக இங்கே இடம் பிடித்துள்ளன...

*கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வருவதைப் போல கம்பு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை, அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

*இயற்கையைச் சீரழிக்காமல், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதற்காகவும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து பாரம்பர்ய ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 100 % மானியம் வழங்க வேண்டும்.

*இயற்கை விவசாயத்துக்காக நாட்டு மாடுகள் வாங்குவதற்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

*இயற்கை விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை மாவட்டம் தோறும் அரசாங்கமே உருவாக்க வேண்டும்.

*ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளும் உரிமை அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வண்டல் மண்ணை வேளாண்மைக்குப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஏரி குளம் போன்றவை சீரான இடைவெளியில் தூர் வாரப்பட்டும் விடும்.

*பழங்குடி மக்களைத்தவிர வனங்களில் வசிக்கும் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். வனங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். வனம் என்பது விலங்குகளின் உலகம். அவை ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. அதன் வாழ்வியல் சங்கிலித்தொடர்பு என்றும் அறுந்து போகக்கூடாது.

*யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

*ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் விலங்குகள் வந்து சேதம் ஏற்படுத்தாமல் இருக்க தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பயிர்வாரி விவசாய முறையைக் கட்டாயமாக நடை முறைப்படுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்