ஏற்ற இறக்கத்தில் வெங்காய விலை... தீர்வு என்ன?

கிலோ ரூ.7... கிலோ ரூ.24..!அலசல் ஜி.பழனிச்சாமி, படம்: பா.காளிமுத்து

குறுகிய நாட்களில் அதிக வருமானம் கொடுக்கும் பணப்பயிர்களில் முக்கியமானது, வெங்காயம். ஆனால், அனைத்து விளைபொருட்களுக்கும் ஏற்படும் ‘திடீர் விலை மாற்ற’ங்களுக்கு வெங்காயமும் விதிவிலக்கல்ல. ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் திடீரென விலை சரிந்து, ஒரு கிலோ 7 ரூபாய் என விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 20-ம் தேதியன்று திடீரென்று கிலோ 24 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்தது. இப்படி திடீர் திடீர் என விலை மாறுதல் ஏற்படும்போது வெங்காய விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறர்கள். 

இதுகுறித்து, திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதி சின்ன வெங்காய விவசாயியும், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவருமான பெரியசாமி நம்மிடம் பேசியபோது, “பொங்கலூர், குண்டடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், துறையூர், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. நடவு செய்த 60 நாளில் ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடிய பயிர், சின்ன வெங்காயம். பல நேரங்களில் விலை உச்சத்துக்கு சென்று 60 நாளில் லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்துவிடும். 

ஆறு மாத காலமாக கிலோ 15 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. திடீரென விலை இறங்கவும்... வெங்காய அறுவடையில் இருந்த விவசாயிகள் பதறிப் போனார்கள். விதை நடவு, களை, இடுபொருள்... என்று ஏக்கருக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் விலைச்சரிவால் விவசாயிகள் கலங்கிப் போனார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்