ஜவ்வாதுமலை... தேனீக்களை கொல்லாமல் தேன் சேகரிப்பு..!

சமரன், படங்கள்: கா.முரளி

யற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பெட்டித் தேனைவிட, இயற்கையாகக் கிடைக்கும் மலைத்தேனுக்கு எப்போதும் மவுசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவக் குணங்களும், தரமும்தான். பாறை இடுக்குகளிலும், மரக்கிளையிலும் கூடு கட்டி தேனைச்  சேமித்து வைக்கும் தேனீக்களை, இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து, புகை போட்டு அழித்துத் தேன் எடுப்பதுதான் நடைமுறையில் இருக்கும் பழக்கம். இந்நிலையில், தமிழகத்திலேயே முன்னோடியாக ஜவ்வாதுமலைப் பகுதிகளில் ஒரு சிலர் மட்டும்... தேனீக்களைக் கொல்லாமல், பகல் நேரங்களிலே தேன் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிலுசிலு காற்று, சிறகடிக்கும் பறவைகள், மலை முகடுகளில் மேயும் ஆடு-மாடுகள் என அழகாகக் காட்சிக் கொடுக்கும் ஜவ்வாதுமலையில் உள்ள நம்மியம்பட்டு என்ற கிராமத்துக்கு அருகே இருக்கும் மலைக்குன்றுகளில் தேன் சேகரித்துக் கொண்டிருந்த சரணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமாரிடம் பேசினோம்.

‘‘தாத்தா, அப்பானு பாரம்பரியமா தேன் எடுத்து, விற்பனை செய்றோம். 15 வயசுல இருந்தே தேன் எடுக்குறதுக்கு எங்க அப்பாகூடப் போவேன். அப்படியே கொஞ்ச கொஞ்சமா பாறை இடுக்கு, நீர்மருது மரம், வாகை மரம்னு உயரமான மரத்துல ஏறி தேன் எடுக்கக் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்