‘‘மரப்பயிர்களும் பணப்பயிர்கள்தான்!’’

கண்காட்சி பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

சென்ற இதழ் தொடர்ச்சி...

லைக்கோட்டை மாநகரான திருச்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய கருத்துரையாளர்களின் உரை கடந்த சில இதழ்களாக இடம்பிடித்து வருகிறது. அதன் தொடர்ச்சி இதோ...

மூன்றாம் நாள் கருத்தரங்கின் காலை அமர்வில் மேடையேறிய ஓய்வுபெற்ற உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரன், ‘பணம் கொடுக்கும் மரங்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

’’விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’. எப்பவுமே மரப்பயிர்களும் பணப்பயிர்கள்தான். இந்த மரம் வளர்ப்பில் குறுகிய கால மரப்பயிர், நீண்ட கால மரப்பயிர்னு ரெண்டு வகை இருக்குது. யூகலிப்டஸ், சவுக்கு மாதிரியானவை குறுகிய கால மரப்பயிர்கள். தேக்கு, குமிழ், வேங்கை மாதிரியானவை நீண்ட கால மரப்பயிர்கள். மரம் வைக்கிற விவசாயிகளையும் சிலர் ஏமாத்திட்டிருக்காங்க. உதாரணமா குமிழ் தேக்குங்கிற மரத்தை தேக்கு மர ரகம்னு சொல்லி கன்னுகளை வித்து ஏமாத்துறாங்க. பர்மா தேக்கு, நிலாம்பூர் தேக்கு, செங்கோட்டை தேக்குனு சில ரகங்களுக்கு மட்டும்தான் நல்ல விலை கிடைக்கும். குமிழ் தேக்குங்கிறதெல்லாம் ஏமாத்து வேலை. அதனால விவசாயிகள் சுதாரிப்பா இருக்கணும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்