பூமியைக் காக்க மனிதச் சங்கிலி!

லக பூமி தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22-ம் தேதி காலை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்... நானூறுக்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள் விழிப்பு உணர்வு மனித சங்கிலி அமைத்து கைகோத்து நின்றனர்.

பூமி தினத்தை முன்னிட்டு... கல்லூரி முதல்வர் எட்வின் ஜோ மற்றும் பேராசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில், சரக்கொன்றை, அத்தி, வேம்பு போன்ற மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதுகுறித்துப் பேசிய முதல்வர் எட்வின் ஜோ, “மக்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, சமூக விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் மருத்துவர்களின் கடமைதான். இயற்கை மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுவது மனிதர்களின்  உடல் நிலைதான். எனவே, நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட இதுபோன்ற விழிப்பு உணர்வுப் பிரசாரம் மூலம் சமூக அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர்த்து மனித உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும். அதனால்தான் இந்த விழிப்பு உணர்வு மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்தோம்” என்றார்.

அன்றைய தினத்தில் அக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் பொது போக்குவரத்து சாதனங்களை மட்டுமே பயன்படுத்தினர். காய்ச்சல் கொண்ட பூமிக்கு தற்காலிக குளிர்ச்சி அளிக்கும் வகையில்.. அன்று இரவு 9.00 மணி முதல் முதல் 9.05 வரை கல்லூரி விடுதியில் மின்சாரத்தை அணைத்து வைத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்