கழிவுநீரை சுத்திகரிக்கும் வெட்டிவேர்!

நாட்டு நடப்பு ஜி.கே. தினேஷ்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இந்திய வெட்டிவேர் பிணையமும் இணைந்து… பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ம் தேதி, வெட்டிவேர்  கருத்தரங்கை நடத்தின. இதில் துணைவேந்தர் ராமசாமி, வெட்டிவேர் பிணையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் பால் ட்ராங், இந்திய வெட்டிவேர் பிணையத்தைச் சேர்ந்த ஹரிதாஸ், சி.கே.அசோக்குமார், மருந்து மற்றும் நறுமணப் பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கே.ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துணைவேந்தர் ராமசாமி தனது துவக்க உரையின்போது, “வெட்டிவேர் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. வெட்டிவேரிலிருந்து பெறப்படும் பல்வேறு வாசனை மூலக்கூறுகளுக்கு உலகெங்கிலும் வரவேற்பு உள்ளதால், அதுகுறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பயிரில் விஞ்ஞானிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் ஈடுபட்டு உழவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பால் ட்ராங் பேசும்போது, “மண்  மற்றும் நில பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, கால்நடைத்தீவனம் எனப் பல வகைகளில் வெட்டிவேர் பயன்படுகிறது. நீலப்பச்சைப் பாசி நிறைந்துள்ள நீர்நிலைகளில், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களை நான்கே நாட்களில் வெட்டிவேர் அகற்றிவிடும். சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளில் வெட்டிவேர் மூலம் கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. தாய்லாந்து, பிரேசில், மடகாஸ்கர், கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் வெட்டிவேர் பற்றிய ஆய்வுகள் நிறைய நடைபெற்று வருகின்றன” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்