‘புதியதோர் உலகம் செய்வோம்’

விவசாயிகளுக்காக புதிய நிகழ்ச்சி!நிகரன், படம்: மீ.நிவேதன்

ளைஞர்களுக்கு விவசாயம் செய்ய வழிகாட்டும் வகையில் பொதிகை தொலைக்காட்சியில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் தொடக்க விழா, சென்னையில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.

விழாவில் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், எம்.ஜே. பிரபு, “விவசாயம் செழித்து வளர்ந்திட வேண்டும். விவசாயம் வளர்ந்தால்தான் நாடு முன்னேறும்... என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டு இந்த ‘புதியதோர் உலகம் செய்வோம்’ நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறோம். மே மாதம் 1-ம் தேதியிலிருந்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வேத நாராயணன், “விவசாயத்தில், விலை குறைவு, வறட்சி போன்ற பல பிரச்னைகள் உள்ளன. அவற்றைக் களையத்தான், இந்த ‘புதியதோர் உலகம் செய்வோம்’ நிகழ்ச்சி. எந்தெந்த சூழ்நிலைக்கு என்னென்ன பயிரிட வேண்டும் என்பதனை விவசாயிகள் நன்கு உணர வேண்டும். நம்மைவிட மோசமான சூழ்நிலையில் இருக்கிற ஜப்பான் விவசாயிகள் நம்மை விட இருமடங்கு உற்பத்தி செய்கிறார்கள். வருவாயைப் பெருக்க வேண்டுமெனில் விவசாயிகள் கலப்புப் பண்ணையத்தில் ஈடுபடவேண்டும்’’ என்றார்.

விழாவில் கலந்து கொண்ட பாரத் கிரிஷக் சமாஜத்தின் தலைவர் அஜய் வீர் ஜாக்கர், “இளைஞர்களும், மாணவர்களும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுபவர்களை, மாணவர்களும் இளைஞர்களும் பின் தொடர வேண்டும். விவசாயம் என்பது லாபமில்லாத தொழில் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது. அந்த எண்ணத்தைக் கைவிட்டால்தான், விவசாயம் செழிக்கும். ஒரு விவசாயி என்ற முறையில் ‘விவசாயம் லாபமில்லாத தொழில்’ என்பதை நான் மறுக்கிறேன். தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தினால் விவசாயத்தில் சாதிக்க முடியும்.

விவசாயிகள், விவசாயத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயத்தில் ஆர்வம் கொண்டு, பல்வேறு துறைகளில் இருந்து வெளியேறி விவசாயம் செய்து சாதித்து வருபவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘புதியதோர் உலகம் செய்வோம்’ நிகழ்ச்சி தொகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்