யாருக்கு உங்கள் ஓட்டு?

தூரன்நம்பி, படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், அ.முத்துகுமார்

அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி என ஒவ்வொரு கட்சியும்... நாங்கள்தான் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் விவசாயம் செழிக்கும் என்று மேடை போட்டு முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இவர்கள் நேற்றுதான் கட்சி ஆரம்பித்தது போலவும், இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் விவசாயத்தைச் செழிக்க வைக்கப் போவது போலவும் பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.   

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆண்டிருக்கிறது. 1947-ம் ஆண்டில் இந்திய வருமானத்தில் 55 சதவிகித பங்கு வகித்தது, விவசாயப் பொருளாதாரம்தான். ஆனால், இன்று வெறும் 14 சதவிகிதம்தான். விவசாயிகள் தற்கொலையும் விவசாயிகளுக்காக கடனும்தான் வளர்ந்திருக்கின்றன. இதுதான் காங்கிரஸ் ஆட்சி கொடுத்த வளர்ச்சி.

காங்கிரஸ் கட்சியில் தலையெடுத்த இரண்டாம் தலைமுறையினர்... பீரங்கி, கார்கில் ராணுவ வீரர்களின் விதவைகளுக்கு கட்டிய வீடு, விளையாட்டு, நிலக்கரி, 2-ஜி, ஹெலிகாப்டர்... என எதையும் விட்டு வைக்காமல் ஊழல் செய்து புகார்களில் சிக்கியுள்ளனர். இவை போதாதென... இந்திய விவசாயிகளை அமெரிக்க தேசத்துக்கு ‘அடிமைப் பட்டயம்’ எழுதிக் கொடுத்ததும் காங்கிரஸ் ஆட்சியில்தான். உலக வர்த்தகத்திலும், மரபணுமாற்று மரண விதை விநியோகத்திலும்... அமெரிக்க அதிபரின் அல்லக்கையாகவே செயல்பட்டார், மன்மோகன் சிங். அது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்