‘தேனில் நனைத்த பலா’!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் விவசாயிகள் மற்றும் விவசாயத்துக்கான நலத்திட்டங்கள் பிரதானமாக இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி புரியும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகியவற்றின் அறிக்கைகள் ‘தேனில் நனைத்த பலா’வாக இனிக்கின்றன.

சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் அனைத்தும் தள்ளுபடி.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய தொகை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-இப்படி நீள்கிறது அ.தி.மு.க-வின் அறிக்கை

சிறு, குறு விவசாயக் கடன்கள் அடியோடு தள்ளுபடி செய்யப்படும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச்சத்தம் ரூ.1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.

-இவையெல்லாம் தி.மு.க-வின் அறிக்கையின் சில அம்சங்கள்

இந்த இரு கட்சிகளின் அறிக்கைகளை உற்று நோக்கினால், கடந்த சில மாதங்களாக, விவசாயம் சம்பந்தமான தகவல்களை திரட்ட கடுமையான களப்பணிகளைச் செய்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே புலப்படுகிறது. ஆனால், ஆட்சியைப் பிடித்தபிறகு இவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு பணியாற்றுவார்களா என்பதுதான் காலகாலமாக உள்ள கேள்விக்குறி!

ஆம், இவர்களின் அறிவிப்புகளில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே விவசாயிகள் முன் வைத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். இந்த இருபது ஆண்டுகளில் மாறிமாறி ஆட்சி நடத்தியவர்கள், அதிகாரம் கையில் இருந்தபோதே நிறைவேற்றியிருக்கக் கூடியவைதான். ஆனால், அதைச் செய்யாமல், வாக்குறுதிகளாகவே அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் இவர்களின் ‘தைரிய’த்தை என்னவென்று சொல்ல?!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்