அழிவின் விளிம்பில் கடல்... எச்சரிக்கை செய்யும் ஆர்வலர்கள்!

#WhereismyGreenWorld செ.சல்மான், இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

ரம்பத்தில் கைகளால் மீன் பிடித்தோம். பிறகு, வலை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடிக்க கற்றுக் கொண்டோம். அடுத்து மரப்பலகைகளில் மிதந்து மீன் பிடிக்க ஆரம்பித்தோம். அது அப்படியே கட்டுமரம், தோனி, படகு கப்பல்... என மாறிவிட்டது. சாதாரணமாக மீன் பிடித்த போதெல்லாம் கடலின் சூழல் அப்படியே இருந்தது. இயந்திரம் பொருத்தப்பட்ட படகு, கப்பல் என கடலுக்குள் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான், கடலுக்கு ‘சனி’ பிடிக்க ஆரம்பித்தது.

அதன் விளைவு... இன்று கடலை நிர்வாகம் செய்பவர்கள், பாரம்பர்ய மீனவர்கள் கிடையாது. பன்னாட்டு கார்ப்பரேட்டுகள். கால ஓட்டத்தில் அவர்களின் அடிமைகளாக மாறியிருக்கிறார்கள், மீனவர்கள். இப்படி பிடிக்கப்படும் மீன்கள் கூட உள்ளூர் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. தமிழக கடற்கரை நகரங்களில் மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பார்த்தாலே, எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் நமது கடல்வளத்தைக் கைப்பற்றி உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், மீன்பிடித் தொழிலை அரசு முறைப்படுத்த தவறியதன் விளைவாக... இரட்டை மடி, சுருக்குமடி, பிளாஸ்டிக் வலைகள், ஜெலட்டின் வெடிமருந்துகள் என கடலுக்கு தீங்கு செய்யும் பல முறைகளில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அதனால், கடலில் மீன்களின் வாழ்விடங்கள் அழிந்து வருகின்றன.
 
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளைச் சுற்றி கடல் பசு, ஆமை, டால்பின் உள்ளிட்ட அரிய கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் 3 ஆயிரத்து 600 வித கடல் தாவரங்கள் உள்ளன. மீன்களின் இனப் பெருக்கத்துக்கும், இயற்கைச் சீற்றத்திலிருந்து நிலப் பகுதியைப் பாதுகாக்கவும் பயன்படும் பவளப் பாறைகள் இப்பகுதியில்தான் அதிகமாக உள்ளன. இவையும் தற்போது நவீன மீன்பிடி முறைகளால் அழிந்து வருகின்றன. கனிமவளக் கொள்ளையர்கள் பவளப் பாறைகளையும் விட்டு வைப்பதில்லை. அதன் காரணமாக கடல் வாழ் அபூர்வ உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்