கூவம் ஆறு: எப்போது சுத்தமாகும்?

கதிர்பாரதி, த.ஜெயகுமார்

மிழகம் முழுவதும் ஆறுகளில் சாக்கடை கழிவுநீரைக் கலந்து விடுவது தொடர்கதையாகிவிட்டது. சுத்தமான நீரை சுமந்து சென்ற ஆறுகள், இன்று சாக்கடை நீரை சுமந்துகொண்டு செல்கின்றன. குறிப்பாக மாநகர, நகர பகுதிகளில் செல்லும் ஆறுகளின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னை மாநகரின் குறுக்கே செல்லும் கூவம் ஆறு, சாக்கடை கழிவுநீரை சுமந்து செல்வதில் உலகுக்கே முன்னூதரணமாக இருந்து வருகிறது.

பாலங்களை கடக்கவே மக்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு, செல்லக்கூடிய கொடுமையான சூழலில் இருக்கும் இன்றைய கூவம் ஆற்றில், 1950களில் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அந்த மீன்களைப் பிடித்து சென்னைவாசிகள் சாப்பிட்டிருக்கின்றனர். 1970-களில் மீன் இனங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இன்று முற்றிலும் சாக்கடையாகிப்போன கூவம் ஆற்றில், ஒரு மீன்கூட இல்லை. கழிவுநீர் கலந்து விடுவதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும், ஆற்றில் செல்லும் நீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்ததே மீன் இனம் இல்லாமல் போனதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்