இனிப்பான லாபம் கொடுக்கும் ‘இயற்கை’ நிலக்கடலை + ஊடுபயிர்கள்...

ஒரு ஏக்கர்... ரூ1 லட்சம் வருமானம்! மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ண்ணெய் வித்துப்பயிர்களில் முக்கியமான பயிர் நிலக்கடலை. இதில், அதிகளவில் புரதம் இருப்பதால், உணவு தானியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நிலக்கடலை மூலம் எண்ணெய் உற்பத்தி முதன்மையாக இருந்தாலும் உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தவிர, அப்படியே வறுத்தும் அவித்தும் சாப்பிடவும் பயன்படுகிறது. அதனால், நிலக்கடலைக்கு எப்போதுமே நல்ல சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. அதனால்தான் பெரும்பாலான மானாவாரி விவசாயிகள் நிலக்கடலைச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இறவைப் பாசன வசதி உள்ள பல விவசாயிகள்கூட, ஒரு போகம் நிலக்கடலை சாகுபடி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலூகா, காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நாராயணன்.

பாதை காட்டிய பசுமை விகடன்!

 
தோட்டத்தில் அறுவடைப் பணியில் இருந்த நாராயணனைச் சந்தித்தோம். “பாரம்பர்ய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆறாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ வாழை, நெல், காய்கறிகள்தான் முக்கியமான விவசாயம். ரசாயன உரம் போட்டுதான் விவசாயம் செய்துட்டு இருந்தோம். விவசாயத்துல வருமானம் குறைவா இருந்ததால, நான் சென்னை போய் ஒரு கடையில மூணு வருஷம் வேலை பாத்தேன். அப்புறம் சென்னையிலேயே மூணு வருஷம் குளிர்பானக் கடை வெச்சிருந்தேன். அந்தக் கடையில புத்தகங்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அந்த வகையிலதான் 2009-ம் வருஷம் எனக்குப் ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அடிப்படையில நானும் ஒரு விவசாயிங்கிறதால பசுமை விகடனை ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன்.

அதுலதான், இயற்கை விவசாயம் குறித்துத் தெரிஞ்சுகிட்டேன். அதுல வந்த தகவல்கள் ரொம்ப ஆச்சர்யமா இருந்ததால, தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்ல குளிர்பானக் கடையும் டல்லடிக்க ஆரம்பிச்சது. அதனால, 2011-ம் வருஷம் ஊர் திரும்பிட்டேன். இங்க விவசாயத்தை விட்டா வேற பொழைப்புக் கிடையாது. அதனால அதையே கையில் எடுத்தேன். ‘அப்பாவை சடார்னு இயற்கை விவசாயத்துக்கு மாத்த முடியாதே. அவரை எப்படி வழிக்குக் கொண்டு வர்றது’னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு சமயம், ‘உரம் வாங்க காசு இல்லை’னு அப்பா சொன்னார்.
 
கைகொடுத்த இயற்கை!

 
உடனே இதுதான் சந்தர்ப்பம்னு, பசுமை விகடனைக் காட்டி உரமே இல்லாம விவசாயம் பண்ண முடியும்னு சொன்னேன். அவர் ஒத்துக்கவும், அந்த வருஷம் ஒரு ஏக்கர் நிலத்துல நாடன் (பேயன்) வாழையை முழு இயற்கை முறையில் சாகுபடி செஞ்சோம். காய்கள் திரட்சியாகவும், நல்ல எடையுடனும் இருந்திச்சு. பக்கத்துத் தோட்டத்து வாழைப் பழங்களைவிட எங்களோட வாழை நல்லா இருந்தது. உடனே அப்பா இயற்கை விவசாயத்தை ஒத்துக்கிட்டார். அதுல இருந்துதான் இயற்கை விவசாயத்தைச் செய்ய ஆரம்பிச்சோம்” இயற்கை விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்ன நாராயணன், தொடர்ந்தார்.
 
தேவையறிந்து சாகுபடி!
 
“அப்புறம் ‘வானகம்’ பண்ணையில நம்மாழ்வார் ஐயாகிட்ட பத்து நாள் இயற்கை விவசாயப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு கத்திரி, மிதி பாகல், கீரை, நிலக்கடலைனு இயற்கை முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். நிலக்கடலைக்கு எப்பவுமே நல்ல தேவை இருக்கிறதால, தொடர்ந்து நிலக்கடலை சாகுபடி செஞ்சிட்டிருக்கேன்.

மொத்தம் 3 ஏக்கர் நிலம் இருக்கு. கரிசல் கலந்த மணல் பாங்கான நிலம். அதுல ஒன்றரை ஏக்கர் நிலத்துல தூயமல்லி, அறுபதாம் குறுவை நெல் ரகங்களைப் போட்டு அறுவடை முடிஞ்சது. அரை ஏக்கர் நிலத்துல அறுவடை முடியுற நிலையில 5 வகை கீரைகள் இருக்கு.
 
ஒரு ஏக்கர் நிலத்துல வைகாசிப் பட்டத்துல டி.எம்.வி-2 (TMV-2) என்கிற திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலைய நிலக்கடலை ரகத்தைத்தான் இப்போ அறுவடை செஞ்சிருக்கேன்” என்ற நாராயணன், விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

விற்பனைக்கு வில்லங்கமில்லை!

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் சேர்ந்து... ‘தேன்கனி உழவர் சந்தை’ங்கிற பெயர்ல வாராவாரம் ஞாயித்துக்கிழமை அன்னிக்கு சிவகாசியில எங்க விளைபொருட்களைச் சந்தைப்படுத்துறோம். காலைல 6 மணியில் இருந்து சாயங்காலம் 3 மணி வரை சந்தை இயங்கும். அங்கதான் நான் நிலக்கடலையை விற்பனை செய்றேன். இயற்கை விளைபொருளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதால விற்பனைக்குப் பிரச்னையேயில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்