கவாத்து... மா மகசூலை அதிகரிக்கும் மந்திரம்..

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

*செப்டம்பர் மாதத்தில் கவாத்து முக்கியம்

*அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்காது

*புதிய கிளைகளை உருவாக்குவதால் மகசூல் இரட்டிப்பாகும்

*தண்டுத் துளைப்பானுக்கு வருமுன் காப்பதுதான் தீர்வு

ரம்பரையாக விவசாயம் செய்து வந்தாலும்... சின்னச் சின்னத் தொழில்நுட்பங்கள்கூடத் தெரியாத விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன விஷயங்களைக் கவனிக்காமல் விடுவதன் விளைவால் அதிக மகசூலை இழக்க வேண்டியதாகி விடுகிறது. அப்படிப்பட்ட சிறிய தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் கவாத்து.

கவாத்து செய்வதால், மகசூல் அதிகரிப்பதோடு தண்டுத் துளைப்பான் பூச்சியிடம் இருந்தும் மா மரங்களைக் காப்பாற்ற முடியும் என்பது பல மா விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. எனவே கவாத்து குறித்த விழிப்பு உணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தும் விதமாக... ‘பசுமை விகடன்’ மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து, ‘மா கவாத்து நேரடி களப்பயிற்சி’யை ஏற்பாடு செய்திருந்தன.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள கருங்குளத்தில் உள்ள எம்.எம். இயற்கை விவசாயப் பண்ணையில், ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ஆபிரகாம் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்