‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

*பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்...

*நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்...

*வெற்றி விவசாயிகளின் அனுபவ உரைகள்..

டந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத்தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாகக் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை... மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. நாள்தோறும் கூட்டம் கூட்டமாக விவசாயிகளும், பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

விதைகள், நாற்றுகள், பண்ணைக்கருவிகள், விசைத்தெளிப்பான்கள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள், மரச்செக்கு எண்ணெய், பயோ உரங்கள், மதிப்புக்கூட்டிய பொருட்கள், புத்தகங்கள், சிறுதானிய உணவுகள், சூரியசக்தி மின்சாரம், உழவுக்கருவிகள், கொட்டில் ஆடு வளர்ப்பு குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய பயிர் பதனீட்டு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு  மெர்க்கண்டைல் வங்கி, தமிழ்நாடு அரசு கனிம நிறுவனம் போன்ற அரசுத்துறைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சர்வதேசத் தரத்தில் குளுகுளு வசதியுடன் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்