அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

கு. ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், க.சதீஸ்குமார்

‘கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதிலிருந்து... கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அம்மாநிலத்தில், செப்டம்பர் 9-ம் தேதி, மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றாத கர்நாடக அரசு, அத்தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு போட்டது. செப்டம்பர் 12-ம் தேதி அதனை விசாரித்த நீதிமன்றம் ‘தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.  அதைத் தொடர்ந்துதான் அங்கு தமிழர்கள் மீதான வன்முறை அதிகமாகியது. ஊடகங்களில் அதுகுறித்துத் தெரிந்துகொண்ட தமிழக மக்கள் மிகுந்த  வேதனையுற்றனர். 

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்; மத்திய அரசு, சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும் என்றும் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆகியவை ‘காவிரிப் போராட்டக்குழு’ என்ற பெயரில் இணைந்தன. இக்குழு, செப்டம்பர் 16-ம் தேதி முழு அடைப்புப்  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அரசியல் கட்சிகள் தனித்தனியாக வெவ்வேறு நாளில் சம்பிரதாயப் போராட்டங்கள் நடத்துவதுதான் கடந்த கால வழக்கம்.  ஆனால், செப்டம்பர் 16-ம் தேதி இந்நிலை தலைகீழாக மாறி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களத்தில் குதித்தது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 19-ம் தேதி டில்லியில் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில், ‘கர்நாடகா, தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர்  திறந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டது. ஆனால் அதற்கு உடன்படாத தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick