மாற்றமும், புதுமையும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு, ‘ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ போல, பின்தங்கிய மாவட்டம் என்றும், கல்வி அறிவில் கடைசி மாவட்டம் எனவும் சொல்லப்படும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி மக்கள், சத்தமில்லாமல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். 

ஆம், சிட்லிங்கி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 300 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்கள். இவர்களின் இயற்கை விவசாய வெற்றிச் சூத்திரங்கள், இந்த இதழிலிருந்து புதிய தொடராக வெளிவருகிறது.

நம் கண்களுக்கு முன்னால் வளர்ந்துக் கிடக்கும் செடி, கொடிகள் அத்தனையும் அருமையான மருந்துகள். ஆனால், அவற்றின் மகத்துவம் தெரியாமல் ‘களைச் செடிகள்’ என்று சொல்லிக் கடந்து போகிறோம். நாம் வாழும் இடங்களில், வளரும் இந்தச் செடிகள்தான், நம் உடல் பிணியைப் போக்கும் அருமருந்துகள். நம் முன்னோர்கள் இவற்றை உண்டுதான், நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள். அந்த இயற்கையின் பொக்கிஷத்தை  இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்த ‘நல்மருந்து’ என்ற தொடர் இந்த இதழில் தொடங்குகிறது.

‘ஒரு நாள் விவசாயி’ பகுதியை மீண்டும் தொடங்குங்கள்; வயலில் இறங்கி இயற்கை விவசாயம் செய்ய வாய்ப்புக் கொடுங்கள் எனத் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் அன்புடன் கோரிக்கை வைத்து வந்தனர். இதோ, இந்த இதழிலிருந்து உங்களுக்காகவே ‘ஒரு நாள் விவசாயி’ பருவம்-2 இடம்பெறுகிறது. நீரின் அருமைகளையும், பெருமைகளையும் சொல்லும், ‘சொட்டு சொட்டாக நீர்’ என்ற தொடரும் அணிவகுத்து வருகிறது. இன்னும், இன்னும் பல மாற்றங்களையும், புதுமைகளையும் செய்துள்ளோம்.

படியுங்கள், பயனடையுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்