நீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி, படம்: வீ.சிவக்குமார்

‘‘இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்து மண்ணில் உள்ள சத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.  அதற்கான மண் பரிசோதனை வழிமுறைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

எம்.ஆர்.வேதாச்சலம், அச்சிறுப்பாக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க.வேல்முருகன் பதில் சொல்கிறார்.

‘‘இயற்கை விவசாயம் செய்தாலும், நம் மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றித் தெரிந்துகொண்டு விவசாயம் செய்வது நல்லது. மண் பரிசோதனை என்பதை மனிதர்களுக்கு உடல் பரிசோதனை போல அவசியமானதும்கூட. தமிழக அரசின், அங்ககச் சான்றளிப்புத் துறை வழங்கும், இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற, மண் பரிசோதனை மற்றும் நீர்ப் பரிசோதனை அறிக்கைகள் அவசியம். நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏனென்றால் மண்ணின் வேதியியல் குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். மண்ணின் தன்மைகளைக் கண்டறிய களர், உவர் மற்றும் அமில நிலங்களைக் கண்டறிந்து அவற்றைச் சீர்திருத்தவும், பயிருக்குக் கிடைக்ககூடிய சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்