காவிரி மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு!

கு. ராமகிருஷ்ணன், படங்கள்: க.தனசேகரன், ம.அரவிந்த்

காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வரும் பிரச்னை, காவிரி நதி நீர்ப் பிரச்னை. ‘உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்’ என்று கர்நாடகா மாநிலத்துக்கும், ‘உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், தமிழக மக்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது ஒத்துக்கொண்ட மத்திய அரசு, அடுத்த அமர்விலேயே... ‘மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ எனக் கூறி தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டது.

‘காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு’ அமைக்கப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்கவிருக்கும் நன்மைகள், அந்த அமைப்பின் அதிகாரம் மற்றும் பணிகள் குறித்து வேளாண் பொருளியல் மற்றும் அரசியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

“ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்களுக்கிடையேயான பக்ரா நங்கல் நதிநீர்ப் பகிர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள பக்ரா-வியாஸ் மேலாண்மை வாரியம் இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘அந்த மாநிலங்களுக்கான நீர்ப்பாசனம், நீர் மின்திட்டம், குடிநீர் ஆகியவற்றுக்கு எப்போது எவ்வளவு தண்ணீர் தேவை என்பதையெல்லாம் பக்ரா-வியாஸ் மேலாண்மை வாரியம்தான் முடிவு செய்து வருகிறது. அதனை ஒத்ததாகக் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட வேண்டும்’ என நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தன்னிச்சையான, சுதந்திரமான, அதிகாரமிக்க அமைப்பாக அவ்வாரியம் செயல்படும். மத்திய நீர்வளத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தலைமைப் பொறியாளர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார். கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை வல்லுநர்களும், இந்த நான்கு மாநிலங்களைச் சாராத நீர்வளத்துறை வல்லுநர்கள், புவி இயற்பியல் வல்லுநர்கள், வேளாண் துறை வல்லுநர்கள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி; தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், பவானிசாகர், அமராவதி; கேரள மாநிலத்தில் உள்ள பானாசூர சாகர் ஆகிய 8 அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும். இந்த அணைகளைக் கண்காணிப்பது, நீர் மேலாண்மை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேலாண்மை வாரியமே மேற்கொள்ளும். அணைகள் பராமரிப்பு, அன்றாட அலுவல்கள் ஆகியவை மட்டுமே அந்தந்த மாநிலங்களிடம் இருக்கும். அந்தப் பணிகளின் செலவுகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவற்றை வழக்கம்போல் அந்தந்த மாநிலங்களே வழங்கும்.

ஆனாலும்கூட பராமரிப்பு தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு உண்டு. உதாரணமாக, அணைகளில் கதவுகள் பழுதடைந்தால், அதனைச் சீரமைக்கச் சொல்லி மேலாண்மை வாரியம் உத்தரவிட முடியும். அந்த உத்தரவுகளை அந்தந்த மாநிலங்கள் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆகவேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், தன்னுடைய துணை அமைப்பாகக் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைத்துக்கொள்ளும். இந்தக் குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை வல்லுநர்கள் மற்றும் இந்த நான்கு மாநிலங்களைச் சாராத நீர்வளத்துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒழுங்காற்று குழு நேரடியாக எட்டு அணைகளையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் செயல்படும். மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளை ஒழுங்காற்று குழு செயல்படுத்தும்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கினால், காவிரி நீர் மேலாண்மையில் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது. இந்த இரண்டு அமைப்புகளும் இயங்குவதற்கான செலவுகளை நான்கு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தலா 40 சதவிகித செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவிகித செலவையும், புதுச்சேரி 5 சதவிகித செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற வெங்கட்ராமன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்