மத்திய அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்!

த்திய அரசு ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காப்பீடு திட்டத்தில்... விதைப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிர் சாகுபடி செய்ய முடியாத அபாயச் சூழ்நிலை, விதைப்பு முதல் பயிர் அறுவடை காலம் வரைக்கும் ஏற்படும் இடையூறு ஆகியவற்றுக்கும் இழப்பீடு கிடைக்கும். அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பு புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூரில் நிகழும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு கிடைக்கும். புதிய திட்டத்தில் வருவாய் கிராம அளவில் கணக்கீடு செய்யப்படும். பயிர்க்கடன் பெறும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு விடுவார்கள். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் இணைய முடியும்.

பயிர் வகையைப் பொறுத்து ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சமாக 134 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 350 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோலப் பயிர் வகையைப் பொறுத்து 8 ஆயிரத்து 900 ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு இழப்பீடு பெற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்