காங்கேயம் காளைகளுக்கு அழகுப்போட்டி! - கண்காட்சி

ச.செந்தமிழ் செல்வன் - படங்கள்: கோ.ப.இலக்கியா

ம்பீரத்துக்கும் வீரத்துக்கும் பெயர் பெற்றவை, காங்கேயம் இனக் காளைகள். அழிவில் இருக்கும் இந்த இனத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் காங்கேயம் கால்நடை இன விருத்தியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கண்காட்சி மற்றும் சிறந்த காளை மாடுகளுக்கான போட்டியை நடத்தி வருகின்றன.

6-வது ஆண்டு நிகழ்ச்சியாக அண்மையில், ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள ஏ.இ.டி பள்ளியில் சிறந்த காங்கேயம் காளை மற்றும் மாடுகளுக்கான அழகுப் போட்டி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான மாடுகள் கலந்துக்கொண்டு அணிவகுத்துச் சென்ற காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் ‘ஹிப்பாப் தமிழா’ ஆதி, “நம்ம ஊர் மாட்டு இனங்கள் இப்போது அழிந்து கொண்டே வருது. சில வருஷங்களுக்கு முன்னாடி பத்து லட்சம் காங்கேயம் மாடுகள் இருந்திருக்கு. இப்போ ஒரு லட்சம் மாடுகள் கூட இல்லை. நம் நாட்டு மாடுகளை நாமதான காப்பாத்தணும்” என்றார்.

விழாவின் ஒருங்கிணைப்பாளர், கார்த்திகேய சிவசேனாபதி, “கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்து வந்த இந்த விழாவின் தாக்கத்தால் இப்போது நிறைய இளைஞர்கள் இங்கு வந்துள்ளனர். நாட்டு மாடுகள் குறைவான பால்தான் கொடுக்கும் என்று நினைக்கக் கூடாது. நாட்டு மாடுகளின் சாணம், சிறுநீர் போன்றவை சிறந்த இயற்கை இடுபொருட்கள். தவிர, நாட்டு மாடுகள் அனைத்து விதமான தட்ப வெப்ப நிலையையும் தாங்கி வளரக் கூடியவை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்