பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

இயற்கைஜி.பழனிச்சாமி - படங்கள்: வீ.சிவக்குமார்

ரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் இடம்பெறுகிறார், ‘முன்னோடி முருங்கை விவசாயி’ ஏ.பி.அழகர்சாமி. இவரைப் பற்றி ‘சக்கைப் போடு போடுது முருங்கை சாகுபடி’ என்று 10.5.2007 பசுமை விகடன் இதழில் எழுதியுள்ளோம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது இவரது 22 ஏக்கர் பண்ணை. இவர் ஒரு முருங்கை விவசாயி மட்டுமல்ல. சிறந்த கண்டுபிடிப்பாளரும்கூட, விண் பதியன் முறை என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாரம்பர்யமான நாட்டுரக முருங்கை மரங்களில் இருந்து உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய ரக முருங்கையை உருவாக்கியுள்ளார். அந்த ரக நாற்றுகளையும் உற்பத்தி செய்து வருகிறார் இவர். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி முருங்கையில் நல்ல மகசூல் எடுத்து வரும் அழகர்சாமியிடம் பேசினோம்.

“எனக்குச் சொந்த ஊர் பள்ளப்பட்டி கிராமம். சாதாரண விவசாயக் குடும்பம்தான். எல்லா விவசாயிகளையும் போல என் அப்பாவும், ‘கஷ்டப்பட்டு நஷ்டப்படுற விவசாயம் என்னோடு போகட்டும். நீயாவது படிச்சுக் கைநிறையச் சம்பளம் வாங்குற வேலைக்குப் போகணும்’னு சொல்லி நல்லா படிக்க வெச்சார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி தாவரவியல் முடிச்சு, கிராம சேவைத்துறையில எம்.ஏ. படிச்சேன். முடிச்சதும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துல வேளாண்மைத் திட்ட அலுவலரா வேலை கிடைச்சது. 10 வருஷம் வேலை செஞ்சேன்.

திரும்பவும் படிக்க ஆசை வரவும், வேலையை விட்டுட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து ‘வேளாண்மையும் நலவாழ்வியலும்’ங்கிற தலைப்புல அஞ்சு வருஷம் ஆய்வு செஞ்சேன். அப்போதான், முருங்கை மரம் குறித்தும் அதன் மருத்துவக் குணங்கள் குறித்தும் ஆராய்ச்சி பண்ண வாய்ப்பு கிடைச்சது. அப்போ, முருங்கை மரங்கள் குறித்த தகவல்கள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்