ஜமுனாபாரி, தலைச்சேரி, நாட்டு ஆடுகள்!

3 ஆண்டுகள், ரூ 6 லட்சம் வருமானம்!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

*ஒரு ஈற்றுக்கு 2 முதல் 3 குட்டிகள்

*ஆறு மாதங்களில் விற்பனை

*விற்பனைக்கு அலையத் தேவையில்லை

வி
வசாயம் பொய்க்கும் நேரங்களில் எல்லாம் விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். குறிப்பாக, குறைந்த பராமரிப்பிலேயே அதிக லாபம் கொடுக்கும் கால்நடைகளில் கோழிக்கு அடுத்தபடியாக இருப்பது ஆடுதான். அதனால்தான் விவசாயிகள் பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஆடு வளர்ப்பில் தற்போது பிரபலமாக இருப்பது பரண் மேல் ஆடு வளர்க்கும் முறைதான். தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்பதால், பலரும் இம்முறையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பரண்மேல் ஆடுவளர்ப்பு முறையில் கலப்பின ஆடுகளை வளர்த்து வருகின்றனர், சுல்தான் பாட்ஷா மற்றும் பிலால் ஆகியோர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் பதினைந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது சேத்தூர் எனும் கிராமம். அங்கிருந்து வலதுபுறம் பிரியும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கரையூர். இங்குதான் சுல்தான் பாட்ஷா மற்றும் பிலால் ஆகியோரின் ‘பாட்ஷா ஆட்டுப்பண்ணை’ இருக்கிறது.

ஒரு மதிய நேரத்தில் அவர்களின் ஆட்டுப்பண்ணைக்குச் சென்றோம். நம்மை வரவேற்று பேசிய சுல்தான் பாட்ஷா, “நான் நத்தத்துல குடியிருக்கேன். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பாத்துட்டு ரிட்டையர்டு ஆகிட்டேன். வேலையில இருக்கிற சமயத்துல சின்னதா தோட்டம் போட்டு, அதோட ஆடுகளையும் வளர்த்துட்டு இருந்தேன். அப்புறம் சூழ்நிலை காரணமா நிலமெல்லாம் கைவிட்டு போயிடுச்சு. அதுக்கப்புறம் விவசாயத்தை விட்டாச்சு. இருந்தாலும் ஆர்வம் குறையலை. என்னோட மூத்த மகன் பெங்களூருல இருக்கார். அவருக்காக வாங்கின நிலம்தான் இது. நானும், என் மகனோட மைத்துனர் பிலாலும் சேர்ந்துதான் இந்த ஆட்டுப்பண்ணையை வெச்சிருக்கோம். பிலால்தான் இங்கேயே பண்ணை வீட்டுல தங்கி ஆட்டுப்பண்ணையைப் பார்த்துக்கிறார். அவரே உங்களுக்கு பண்ணைக் குறித்து சொல்வார்” என்று பிலாலை அறிமுகப்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்